Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக ஏறபட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் துயரம்


இமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் எற்பட்ட நிலச்சரிவு தொடர்புடைய விபத்துகளில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி துயரம் தெரிவித்துள்ளார்.

“இமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு தொடர்புடைய விபத்துகளில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

இமாசல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்துகளில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மண்டிக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குவார்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****