பி.எம்.இந்தியா
இயற்கையைப் பாதுகாப்பதிலும் மதிப்பதிலும் மனித சமூகத்தின் நலன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத மரபுகள், இந்த நேர்மையான வாழ்க்கை முறையை உறுதி செய்யவும், இயற்கையான உலகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழவும் நம்மை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இயற்கையோடும் நேர்மையோடும் நல்லிணக்கத்துடன் வாழ்வது மகிழ்ச்சி, பாதுகாப்பு, நலவாழ்வு ஆகியவற்றின் அடிப்படை என்பதை சுபாஷிதம் கூறுகிறது. அதனால், திசைகளின் காவலர்கள், இந்திரன் தலைமையிலான முக்கிய தெய்வங்கள், 6 பருவங்கள், அனைத்து மாதங்கள், ஆண்டுகள், இரவுகள், நாட்கள், மங்களகரமான தருணங்கள் ஆகியவை என்றும் ஆசீர்வாதத்தையும் வளமையையும் அளிக்கட்டும். வேதங்களும், புனிதமிக்க மரபுகளும், நேர்மையும், அனைவரையும் அனைத்துத் தருணங்களிலும் பாதுகாக்கட்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290215®=3&lang=1
—-
TV/IR/KPG/KR
प्रकृति के संरक्षण और सम्मान में ही मानवता का कल्याण निहित है। हमारी परंपरा भी हमें इसी धर्मसम्मत आचरण की प्रेरणा देती है।
— Narendra Modi (@narendramodi) July 28, 2026
लोकपालाश्च ते सर्वे वासवप्रमुखास्तथा। ऋतवः षट् च ते सर्वे मासाः संवत्सराः क्षपाः॥
दिनानि च मुहूर्ताश्च स्वस्ति कुर्वन्तु ते सदा। श्रुतिः स्मृतिश्च धर्मश्च… pic.twitter.com/oW0CPDnrnP