Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கும், வரி ஏய்ப்பை தடுப்பதற்குமான இந்தியா ஜப்பான் இடையேயான ஒப்பந்தத்திற்கான திருத்தம்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி, இந்தியா ஜப்பான் இடையே 1989ம் ஆண்டில், இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கும், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் கையெழுத்தான, இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தம், இந்தியா ஜப்பான் இடையே சர்வதேச விதிகளின்படி, வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களையும், வரி தொடர்பான இதர தகவல்களையும் பரிமாறிக் கொள்ள வகை செய்யும். இந்திய குடிமக்கள் தொடர்பாக ஜப்பானிலிருந்து பெறப்பட்ட இத்தகைய தகவல்களை, ஜப்பானில் உரிய அதிகாரியின் ஒப்புதலோடு, இதர நாடுகளில் உள்ள காவல் துறையோடு பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் உத்தரவாதம் வழங்கியுள்ள கடன்கள் மீதான வட்டிக்கு வரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்கவும், வருவாய் கோரிக்கைகள் தொடர்பாக பரஸ்பரம் உதவி செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

***