Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய இராணுவத்திற்கு பிரதமர் வாழ்த்து


இராணுவ தினத்தையொட்டி பிரதம மந்திரி, திரு.நரேந்திர மோடி இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் தன்னகரில்லா சேவைக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார்.

“இராணுவ தினத்தில் அனைத்து வீரர்கள், முன்னாள் இராணுவத்தினர் & அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் தன்னிகரில்லா சேவையை நாம் வணங்குகிறோம்.

இந்திய நாட்டின் கவுரவத்தை பாதுகாப்பதிலும் அல்லது இயற்கை பேரழிவுகளின்போது குடிமக்களுக்கு உதவுவதிலும் இந்திய இராணுவம் முன்னின்று செயல்படுகிறது.

நமது இராணுவம் செய்த அனைத்து தியாகங்களையும் நாம் பெருமையோடு நினைவு கூற வேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை துணிச்சலாக எதிர்கொள்வதால் தான், 125 கோடி இந்தியர்கள் அமைதியாக வாழ முடிகிறது” என பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்,