Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 16, ஏப்ரல் 2018-ல் கையெழுத்தானது.

பலன்கள்:

     இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பில் இருநாடுகளும் தத்தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் உதவும். அத்துடன், உணவுப் பாதுகாப்பில் இருநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளில் புரிந்துணர்வை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாணவும் உதவிகரமாக இருக்கும்.

     உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயத்தை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளை எளிதில் அணுகவும், முக்கியமான உணவுப் பொருள் வர்த்தகத்திற்கும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.