Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உண்மையான ஞானத்தின் மாற்றத்தக்க சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


உண்மையான ஞானம் என்பது நாடு, சமூகம், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனுக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது ஞானமும், செயல்களும் மனித சமூகத்தின் உத்வேகத்திற்கு காரணமாக அமைவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்-

ஆன்மா இயற்கையாகவே என்றும் தூய்மையானது, நித்தியமானது ஆனந்தமயமிக்க, சுய ஒளியுடையது என்று சுபாஷிதம் கூறுகிறது. எனினும், அறியாமையின் காரணமாக அது தூய்மையற்றதாக காணப்படுகிறது. உண்மையான ஞானத்தின் மூலம் அது மீண்டும் தமது தூய்மையான இயல்பை வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265249&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR