Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட சம்பவத்திற்கு பிரதமர் துயரம்


உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் என்ற இடத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்துள்ளார். நிலைமை மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரெயில்வே அமைச்சகமும், உ.பி. அரசும் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“முசாபர்நகரில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட சம்பவம் அறிந்து கடும் வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடனேயே என் எண்ணங்கள் உள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். நிலைமையை ரெயில்வே அமைச்சகம் நெருக்கமாக கண்காணித்து வருகிறது.

ரெயில்வே அமைச்சகமும், உ.பி. அரசும் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொண்டு ரெயில் தடம்புரண்டதால் ஏற்பட்டுள்ள விபத்தையொட்டி அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

******