Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற “நகர்ப்புறங்களை மாற்றியமைத்தல்” பற்றிய நிகழ்ச்சியில் பிரதமரின் உரை


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்துள்ள எனது அருமை சகோதர சகோதரிகளே,

முதலில் உத்தரபிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், உங்களை கனிவோடு வரவேற்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரத்தின் அன்பான உபசரிப்பை, லக்னோவாசிகளின் வழியில் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். நண்பர்களே, நீங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு, மாற்றத்திற்கான பணிகளை அடிமட்ட அளவில் செயல்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் மேயர் அல்லது ஆணையாளர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி என யாராக இருந்தாலும், புதிய நூற்றாண்டில், புதிய இந்தியா மற்றும் புதிய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் இந்திய நகரங்களின் பிரதிநிதிகளாக இங்கு வந்திருக்கிறீர்கள். கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளை நனவாக்க, கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் எங்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி வருகிறீர்கள்.

சற்று முன்பு, இங்கு ஒரு கண்காட்சியை பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ், சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வரும் சில நகரங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சில சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு வீடுகளுக்கான சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சாவிகளை பெற்றுக் கொண்ட பிறகு, அவர்களது முகத்தில் ஏற்பட்டுள்ள பொலிவும், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையும், நம் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது.

இந்த மேடைக்கு வருவதற்கு முன்பாக, அது போன்ற பல்வேறு பயனாளிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஏழைகள் மற்றும் வீடற்ற மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் மனநிறைவைத் தருகிறது. விருது பெற்ற நகரங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் மக்களுக்கும், வீடுகளின் சாவிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், நான் விருது வழங்கியபோது, என்னிடம் அதனைப் பெற்றுக்கொள்ள வந்தவர்களில் இரண்டு மேயர்கள் மட்டுமே ஆண்கள் என்பதையும், எஞ்சியவர்கள் பெண்கள் என்பதையும் நீங்கள் கவனித்து இருப்பீர்கள். மன உறுதியோடு இந்தப் பணியை நிறைவேற்றிய நமது சகோதரிகளை பாராட்டும் விதமாக அனைவரும் கைதட்ட வேண்டும்.

நண்பர்களே,

நகர்ப்புறங்களில் உள்ள வீடற்ற மக்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கும் திட்டமானாலும் சரி, 100 பொலிவுறு நகரங்களை ஏற்படுத்தும் பணியானாலும் சரி, அல்லது 500 அம்ருத் நகரங்களானாலும் சரி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதானதாகவும், அவர்களது வசதிக்கேற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், மாற்றும் பணி கடந்த 3 ஆண்டுகளில் வலிவு பெற்றுள்ளது.
தற்போது உங்களை கவுரவிக்கும் வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள். இந்திய மக்கள் அனைவரையும், கவுரவிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

கூடுதல் விவரங்களுக்கு www.pin.nic.in என்ற வலைதளத்தைக் காணவும்