பி.எம்.இந்தியா
லக்னோவில் தொழில்முனைவோராகவுள்ள எனது நண்பர்களை ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக நான் சந்திக்கிறேன். ஏற்கனவே பிப்ரவரி மாதம் நடந்த உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின்போது நான் லக்னோ வந்திருந்தேன். அந்த உச்சி மாநாட்டின்போது, உ.பி.யில் ரூ.4.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டு ஆலோசனைகள் வந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கள நிலைமைக்குக் கொண்டு வர இன்று எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நடவடிக்கை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்குள்ள அதிகாரிகளுக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் செய்திருக்கும் செயல் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. நிதி மூலதனம் வரும்போது ஏற்படுகின்ற பலவகையான தடைகள் பற்றி நான் அறிவேன். நீதிமன்றத்தில் ஒற்றை மனு தாக்கல் செய்ய்பபடுவது பணியை 2-3 ஆண்டுகளுக்கு நிறுத்தி விடும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிரச்சனைக் கையில் எடுத்தால் அதன் மேல் அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள். ஊடகவியலாளருக்கு இந்த பிரச்சனை சென்று சேர்ந்தால் இந்தத் திட்டத்தை ஒப்படைக்க அரசே கூட அச்சம் கொள்ளும். ஏனென்றால் எதிரிகள் நன்கு திட்டமிட்டு சில வேலைகளைச் செய்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஐந்து மாதங்களுக்குள் தடைகளைத் தாண்டி ரூ.60,000 கோடி முதலீடு கிடைத்திருப்பது சிறந்த சாதனையாகும்.
உத்தரப்பிரதேசத்தில் இதற்கு முன் இப்படிப்பட்ட பணி நடந்ததாக எவரும் எழுந்து நின்று உரிமை கோர மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். உண்மையிலேயெ இவை உத்தரப்பிரதேசத்தின் புதிய விஷயங்களாகும். யோகி அவர்களின் தலைமையில் உள்ள அரசு முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பு வைத்து அவர்களின் விருப்பத்தை முதலீடாக மாற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசு அனுமதி பெறுவதற்கு நிவேஷ் பந்து போன்ற ஒற்றைச்சாளர முறை அல்லது ஆணையவழியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை வெளிப்படையான பணி கலாச்சாரத்தைக் காட்டுவது மட்டுமின்றி உ.பி.யில் வணிகம் செய்வதற்கு சாதகமான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. உ.பி.யில் முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய சவாலான காலம் இருந்தது உண்டு. அந்த சவால்கள் இப்போது வாய்ப்புகளாக உருமாறி உள்ளன. வேலைவாய்ப்பு, வணிகம், நல்ல சாலைகள், போதிய அளவு மின்சாரம், சிறந்த நிகழ்காலம், பிரகாசமான எதிர்காலம் எனும் வாய்ப்புகள் உ.பி.மக்களிடம் நம்பிக்கையை வளர்த்து வருவதன் அறிகுறிகளாகும். நீங்கள் மேற்கொள்ளும் கடும் உழைப்பால் உ.பி. விரைவிலேயே ஆயிரம் கோடி டாலர் பொருளாதாரக் களஞ்சியமாக மாறி விடும் என்று நான் நம்புகிறேன்.
உ.பி.யின் 22 கோடி மக்களுக்கு அன்னை வட்டியோடு திருப்பித் தருவதாக நான் வாக்குறுதி அளித்திருந்தேன். எனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இவை உ.பி.யின் நிதி மற்றும் தொழில்துறையில் உள்ள சமச்சீர் இன்மையைப் போக்க உதவும். இவை மாநிலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் உட்பட்டதாக இருக்காது. நொய்டா, கிரேட்டர் நொய்டா, மீரட், முசாஃபர் நகர், ஜான்சி, ஹர்தோய், அமேதி, ரேபரேலி, ஜான்பூர், மிர்சாப்பூர், போரக்பூர் ஆகியவற்றுக்கும் நீடிக்கப்படும். டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகிய திட்டங்களுக்கு மிகப் பெரிய ஊக்கம் என்பதை இவை நிரூபிக்கும். இணையதள சேவையை அதிவிரைவாக்குவது அல்லது கண்ணாடி இழை கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஐ.டி.மையங்களை அமைப்பது ஆகியவை உ.பி.க்கு புதிய வேகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும். அத்துடன் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் தரும்.
உ.பி. சூரிய எரிசக்தியின் குவிமையமாக உருவாகவுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமான சூரிய சக்தித் திட்டம் மிர்சாப்பூரில் தொடங்கப்பட்டது. இன்று மற்றொரு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கதம்பூர்-ஹாப்பூர் இடையேயான மின்சாரம் கொண்டு செல்லும் பாதை இன்று தொடங்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கச் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். முந்தைய ஆட்சிக்காலத்தில் மின்சாரம் கொண்டு செல்வதில் ஏற்பட்ட இடையூறுகளை மாற்றியமைக்க யோகி அவர்களின் அரசு முன்வந்துள்ளது. உ.பி.யின் லக்னோ தொகுதியிலிருந்து நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். நமது மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள் வளமான, தகுதிமிக்க, உணர்வுபூர்வமான இந்தியாவைக் காண விரும்பினார். ஏழை, பணக்காரர் தொழிலாளி, முதலாளி, நிர்வாகம், குடிமக்கள் ஆகியோருக்கு இடையே இடைவெளி எதுவும் இருக்கக் கூடாது என்றும் அவர் விரும்பினார். இந்த சிந்தனையை 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளோடு இணைத்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல நாம் பாடுபடுகிறோம்.
நாட்டின் மிக பெரிதான பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தையும், புந்தேல்கன் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தையும் விரைந்து முடிக்க நாம் முயற்சி செய்கிறோம். கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதும் மக்களின் பங்கேற்புடன் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதும்தான் நமது ஒரே ஒரு திட்டமாகும். உத்தரப்பிரதேசத்திற்கும், நாட்டிற்கும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் என் இதயத்தின் அடிஆழத்திலிருந்து உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
******
எஸ்.எம்.பி. – கோ
पांच महीने में ये दूसरी बार है जब उद्योग जगत से जुड़े साथियों के साथ मैं यहां लखनऊ में मिल रहा हूं।
— PMO India (@PMOIndia) July 29, 2018
इससे पहले फरवरी में यूपी इन्वेस्टर्स समिट के लिए भी आप आए थे।
मुझे प्रसन्नता है कि उस संकल्प को ज़मीन पर उतारने की कड़ी में आज बड़ा कदम उठ रहा है: PM
कुछ लोग इसे Ground Breaking सेरेमनी कह रहे हैं,
— PMO India (@PMOIndia) July 29, 2018
लेकिन मैं इसे Record Breaking सेरेमनी कहूंगा।
इतने कम समय में जिस प्रकार प्रक्रियाओं को तेज़ी से आगे बढ़ाया गया है,
पुराने तौर तरीकों को बदला गया है, ऐसा उत्तर प्रदेश में देखने को नहीं मिलता था: PM
मुझे खुशी है कि योगी जी के नेतृत्व में सरकार ने निवेशकों से संवाद बनाए रखा और
— PMO India (@PMOIndia) July 29, 2018
Intent को Investment में बदलने के लिए माहौल तैयार किया
Online MoU ट्रैकर हो या क्लीयरेंस के लिए निवेश मित्र जैसा डिजिटल प्लेटफॉर्म,
ये यूपी में बिजनेस के लिए बने अनुकूल वातावरण को दर्शाता है: PM
मैंने यूपी की 22 करोड़ जनता को वचन दिया था कि उनके प्यार को ब्याज़ समेत लौटाउंगा
— PMO India (@PMOIndia) July 29, 2018
यहां जो परियोजनाएं शुरु हो रही हैं वो उसी वचनबद्धता का हिस्सा हैं
ये प्रोजेक्ट्स उत्तर प्रदेश में आर्थिक और औद्योगिक असंतुलन को दूर करने में भी सहायक होंगे: PM
ये प्रोजेक्ट्स Digital India और Make in India को नया आयाम देने की दिशा में बहुत बड़े कदम सिद्ध होने वाले हैं
— PMO India (@PMOIndia) July 29, 2018
उत्तर प्रदेश में इंटरनेट सर्विस पहुंचाने के लिए फाईबर बिछाना हो या फिर
IT सेंटर स्थापित करना
डिजिटल इंफ्रास्ट्रक्चर यूपी के विकास को नई गति, नई दिशा देने वाला है: PM
एक ऐसी व्यवस्था खड़ी करना चाहते हैं जहां किसी प्रकार के भेदभाव की गुंजाइश ना हो,
— PMO India (@PMOIndia) July 29, 2018
प्रक्रियाओं में गति भी दिखे और संवेदनशीलता भी,
ना अपना,
ना पराया,
ना छोटा,
ना बड़ा,
सबके साथ समान व्यवहार।
यानि कुल मिलाकर सबका साथ, सबका विकास: PM
आज देश दुनिया के लिए Mobile Manufacturing का हब बनता जा रहा है
— PMO India (@PMOIndia) July 29, 2018
इस Manufacturing Revolution की अगुवाई उत्तर प्रदेश कर रहा है
यूपी में 50 से अधिक मोबाइल फोन बनाने वाली फैक्ट्रियां काम कर रही हैं
दुनिया की सबसे बड़ी Manufacturing Unit की भी शुरुआत यहां हो चुकी है: PM
सरकार Holistic vision, Inclusive Action की अप्रोच पर काम कर रही है।
— PMO India (@PMOIndia) July 29, 2018
यहां मौजूद आप सभी को और तमाम निवेशकों को भरोसा दिलाना चाहता हूं कि अभी तो ये शुरुआत है।
आप राष्ट्र निर्माण की एक महत्वपूर्ण इकाई हैं और आपके संकल्प, देश के करोड़ों नौजवानों को सपनों से भी जुड़े हुए हैं: PM
बिजली के क्षेत्र में जो भी Reforms किए गए हैं, उनसे देश और देश के सामान्य जन के हज़ारों करोड़ रुपयों की बचत हुई है।
— PMO India (@PMOIndia) July 29, 2018
उदय योजना ने डिस्ट्रिब्यूशन कंपनियों को नई लाइफलाइन दी है।
उजाला के LED बल्ब लगाए गए उससे 3 वर्षों के दौरान बिजली के बिल में करीब 50,000 करोड़ की बचत हुई है: PM
देश के पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी कहते रहे हैं कि वो ऐसा भारत देखना चाहते हैं जो समृद्ध हो, सक्षम हो और संवेदनशील हो।
— PMO India (@PMOIndia) July 29, 2018
जहां गांव और शहरों के बीच खाई ना हो।
जहां केंद्र और राज्य में,
श्रम और पूंजी में,
प्रशासन और नागरिक में Gap ना हो: PM