Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகத் தலைவர்களிடமிருந்து பிரதமர் வாழ்த்துச் செய்திகளை தொடர்ந்து பெற்று வருகிறார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, உலகம் முழுவதும் உள்ள தலைவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகளை இன்றும் தொடர்ந்து பெற்று வருகிறார். இவற்றில், இலங்கை அதிபர் மேதகு திரு.மைத்ரிபாலா சிறீசேனா: சவுதி அரேபியா அரசர் எச்.எம்.சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத்; அமெரிக்க அதிபர் மேதகு திரு.டோனால்ட் ட்ரம்ப்; மற்றும் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மேதகு திரு.புஷ்பா கமால் தாஹல் ‘பிரசாந்தா’ ஆகியோரிடமிருந்து பெற்ற தொலைபேசி வாயிலான வாழ்த்துகளும் அடங்கும்.

பிரதமரை வெகுவாக வாழ்த்தியுள்ள அதிபர் சிறீசேனா, இரு அண்டை நாட்டுகளுக்கு இடையேயான உயர் அளவிலான பங்கேற்புகளை குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இலங்கை அதிபருக்கு பிரதமர் திரு.மோடி நன்றி தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகள் மற்றும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மேலும் கூட்டாக இணைந்து பணியாற்ற தயாராக உள்ள தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பிரதமர் திரு.மோடி தலைமையின் கீழ் இந்திய மக்களின் வளம் மற்றும் முன்னேற்றம் காண கனிவான வாழ்த்துக்களைத் தெரிவித்த சவூதி அரேபியா அரசருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையேயான இரு தரப்பு உறவுகளுக்கான வழிகாட்டுதலுக்காக மேதகு அரசருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மாபெரும் வெற்றியடைந்ததற்காக பிரதமருக்கு அதிபர் ட்ரம்ப், தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஜப்பான், ஒசாகாவில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகள் உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய நடப்புகள் குறித்து கலந்துரையாட ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளுக்கிடையேயான நெருங்கிய மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக கூட்டாக இணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

*******