Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


உலகத் தலைவர்கள், பல்வேறு தரப்பு மக்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துகளால் தாம் நெகிழ்ந்துள்ளதாகவும், இந்தியாவிற்கு சேவையாற்றுவதும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பதும் ஒரு பெரும் பாக்கியம் என்று குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கையே தனது மிகப்பெரிய பலம் என்று கூறிய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கவும், 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், இந்தியாவின் உலகளாவிய கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்தவும் இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதிபூண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“அதிபர் போலா அகமது டினுபு, உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

நமது நட்பையும், இந்தியா, நைஜீரியா இடையேயான வலுவான கூட்டாண்மையையும் நான் பெரிதும் மதிக்கிறேன். நமது மக்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்காகவும், தென்பகுதி நாடுகளின் முன்னேற்றத்திற்காகவும் நாம் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.”

“பிரதமர் அன்வர் இப்ராகிம், உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி.

இந்தியா, மலேசியா இடையேயான வலுவான, நீடித்த நட்பை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது மக்கள், பிராந்தியத்தின் நலனுக்காக நமது நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

“அதிபர் திசநாயக்க, உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

இலங்கையுடனான நீடித்த நட்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது, நமது சிறப்புமிக்க, பன்முகத்தன்மை கொண்ட நட்புறவை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.”

“அதிபர் முய்சு, உங்களுக்கு நன்றி.

நமது மக்களின் நலனுக்காக இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் எனது அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.”

“அதிபர் வில்லியம் ரூட்டோ, உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

கென்யாவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளையும், வலுவான நட்புறவையும் இந்தியா மதிக்கிறது. நமது நாடுகள், மக்களின் பரஸ்பர நலனுக்காக உங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

“ஐரோப்பிய யூனியன் தலைவர் கோஸ்டா, உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

ஐரோப்பிய யூனியனுடனான உத்திசார் நட்புறவுக்கு இந்தியா மிக  முக்கியத்துவம் அளிக்கிறது. எதிர்வரும் காலங்களில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

“பிரதமர் மெலோனி, உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

நமது இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில், இந்தியா-இத்தாலி இடையிலான சிறப்பு உத்திசார் நட்புறவில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

“அதிபர் ட்ரம்ப், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

நமது இரு நாடுகளுக்கும், உலகிற்கும் நன்மை பயக்கும் வகையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய உத்திசார் நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.”

*

TV/IR/RJ/SE