Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகளாவிய கலாச்சார உரையாடலின் வடிவமைப்பில் இந்திய நாகரிக பாரம்பரியத்தின் வளர்ந்துவரும் பங்களிப்பை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


உலகளாவிய கலாச்சார உரையாடலின் வடிவமைப்பில் இந்திய நாகரிக பாரம்பரியத்தின் பங்களிப்பு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை  எடுத்துரைத்து, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்தார்.

இக்கட்டுரையில் வலுவான கலாச்சார ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் முதலாவது எஸ்சிஒ  பண்பாட்டு உரையாடல் மன்றம், இந்திரபிரஸ்தா பிரகடனம் ஆகியவை குறித்து திரு ஷெகாவத் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய பாதுகாப்பு, கலாச்சார ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆக்கப்பூர்வமான நிறுவனம் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் வளமான நாகரிக மரபுகளை உலக அளவில் எவ்வாறு கொண்டுசெல்லலாம் என்பது குறித்து அவர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

உலகளாவிய கலாச்சார உரையாடலின் வடிவமைப்பில் இந்திய நாகரிக பாரம்பரியத்தின் பங்களிப்பு வளர்ந்து வருகிறது.

வலுவான கலாச்சார ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் முதலாவது எஸ்சிஒ பண்பாட்டு உரையாடல் மன்றம், இந்திரபிரஸ்தா பிரகடனம் ஆகியவை குறித்து மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதியுள்ளார்.

பாரம்பரிய பாதுகாப்பு, கலாச்சார ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆக்கப்பூர்வமான நிறுவனம் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் வளமான நாகரிக மரபுகளை எவ்வாறு உலக அளவில் கொண்டுசெல்லலாம் என்பது குறித்து அவர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

***

Release ID: 2341109

SS/IR/LDN/PS