Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது செலுத்துவாகனமான ஆர்.எல்.வி-டீ.டி. செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மறுபயன்பாட்டிற்கு உகந்த விண்வெளி செலுத்து வாகனம் ஆர்.எல்.வி-டீ.டி. வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மறுபயன்பாட்டிற்கு உகந்த விண்வெளி செலுத்து வாகனம் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமான முறையில் சோதனை செய்யப்பட்டது நமது விஞ்ஞானிகளின் தொழில் ரீதியான முயற்சிகளின் காரணமாக பெற்ற பயன். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கடந்த ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோ துடிப்புடனும் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியது, தனித்தன்மை வாய்ந்தது மற்றும் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.