பி.எம்.இந்தியா
உரத் துறையில் பெரும் கொள்கை மாற்றங்களைச் செய்வதன் ஒரு பகுதியாக, ஊட்டச் சத்து அடிப்படையிலான மான்ய திட்டத்துக்கான குறைந்த பட்ச தகுதியை, சூப்பர் பாஸ்பேட் யூனிட்டுகளுக்கு ரத்து செய்து, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. இது உடனடியாக அமலுக்கு வரும்.
யூரியா உற்பத்திக்கான வாயு ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளிட்ட புதிய யூரியா கொள்கை 2015யின் தொடர்ச்சியே இந்த முடிவு. எரிசக்தி திறன் வளர்ப்பு மற்றும் எரிவாயு விலை சீர்திருத்தம் ஆகியவற்றால், இந்த ஆண்டு மிக அதிகமான யூரியா உற்பத்தி செய்யப்பட்டள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 17 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயமல்லாத பணிகளுக்கு யூரியாவை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக இப்போது 100 சதவிகித யூரியாக்களிலும் வேம்பு சாயம் பூசப்படுகிறது.
மேலும் நகரங்களின் குப்பைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உரம் ஊக்கப்படுத்தப்படுவதனால், நகரங்கள் தூய்மையாக ஆவதோடு, மண் வளமும் அதிகரிக்கிறது. இந்த கொள்கையின்படி முதன் முறையாக குப்பை உரத்தை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு டன்னுக்கு ரூபாய் 1500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
ஒற்றை சூப்பர் பாஸ்பேட், பல ஊட்டச் சத்துகளைக் கொண்ட உரமாகும். அதில் 16 சதவிகித சல்பேட், 11 சதவிகித சல்பர், 16 சதவிகித கால்சியம் மற்றும் சில நுண் ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் எளிமையான உற்பத்தி முறை காரணமாக, அது மலிவாகக் கிடைக்கும் ஒரு ரசாயன உரமாக உள்ளது. இது எண்ணை விதைகள், பருப்பு வகைகள், தோட்டங்கள், காய்கறிகள் மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்கு பயன்படுகிறது.
01.10.2009 முதல் சூப்பர் சல்பேட் உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 40,000 டன்கள் அல்லது உற்பத்தி திறனில் 50 சதவிகிதம் இதில் எது குறைவோ அந்த அளவு உற்பத்தி செய்தால்தான் மான்யத்துக்கு தகுதி பெறுவர் என்று விதி இருந்தது. தொடக்கத்தில் இதனால் உற்பத்தி சிறிது கூடினாலும், கடந்த நான்காண்டுகளாக சூப்பர் சல்பேட் உற்பத்தி தேக்க நிலையிலேயே இருந்தது.
குறைந்தபட்ச உற்பத்தி என்ற நிபந்தனையின் காரணமாக, ஏராளான சூப்பர் சல்பேட் உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரத்தை வழங்கினாலும், அரசு மானியத்தை பெற முடியாமல் அவதிப்பட்டனர். பல்வேறு தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்காமலேயே இருந்தன. மான்யத்துக்கு தகுதியில்லாமல் இருந்தது, உற்பத்தியாளர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உற்பத்தியை குறைத்தது. புதிய உற்பத்தியாளர்கள், தங்கள் புதிய உரத்தை சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிக்க அவகாசம் ஆகும் என்ற காரணத்தால் அவர்களாலும் மானியத்தை பெற முடியவில்லை. மேலும் இந்த நிபந்தனை சூப்பர் சல்பேட் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே. இதர உற்பத்தியாளர்களுக்கு இல்லை.
இந்த புதிய கொள்கை, தற்போது உள்ள குறைந்தபட்ச உற்பத்தி நிபந்தனையை நீக்குகிறது. சூப்பர் சல்பேட் உற்பத்தியாளர்களும் இதர உற உற்பத்தியாளர்களைப் போல, அவர்கள் உற்பத்தி செய்யும் உரத்தின் அளவில் அடிப்படையில் இல்லாமல் மானியம் பெற தகுதி பெறுகின்றனர்.
இந்த புதிய கொள்கை சூப்பர் சல்பேட் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, புதிய உற்பத்தியாளர்களுக்கு இடமளித்து உள்ளூர் சூப்பர் சல்பேட் உற்பத்தியை அதிகரிக்கும். சந்தை தேவைகளுக்கு ஏற்ப சூப்பர் சல்பேட் உற்பத்தியாளர்கள் திட்டமிட இது உதவும். இறக்குமதி செய்யப்படும் மற்றொரு உர வகையான டி.ஏ.பி.க்கு சூப்பர் சல்பேட் சரியான மாற்று. சூப்பர் சல்பேட் உரத் துறையின் வளர்ச்சி, டிஏபி உரத்தின் இறக்குமதியை குறைப்பதோடு, உள்ளுர் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.
மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்காக, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கயி கலப்பு உரம் உற்பத்திக்கும் இது உதவும்.
இந்த புதிய கொள்கை, அனைத்து வகையான உரங்களுக்கும் பொருந்தும். இது அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும்.