பி.எம்.இந்தியா
சாலை, ஏழைகளுக்கு வீட்டு வசதி, பள்ளிகள், நீர் பாசனத் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்க நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் தேவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றும் வகையில் மாநிலங்களவை அதற்கான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வாவின் ஸ்ரீ சிங்காஜி அணல் மின் நிலையத்தின் பிரிவு-1 மற்றும் பிரிவு-2க்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் இத்திட்டத்தை நாட்டிற்கு அர்பணித்தார். அப்பொழுது அவர் அங்கு திரண்டிருந்த பெரும் விவசாயிகளின் கூட்டத்தில் தெரிவித்ததாவது.
வளர்ச்சிக்கான அரசின் நடவடிக்கைகளை சிலர் தவறாக எடுத்துரைத்து இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்ற எண்ணத்தையும் கொண்டுவந்துள்ளனர். இதனை விவசாயிகள் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டிற்காக இந்த அனல் மின் நிலையத்தை அர்பணிக்கும் விழாவிற்கு, ஹோலி பண்டிகை அன்று கூட ஊரக பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துள்ளனர். இது வளர்ச்சிக்கான அவர்களின் அர்பணிப்பை காட்டுகிறது.
வளர்ச்சிக்கு எரிசக்தி மிகவும் அவசியமாகும். அனைவருக்கும் எரிசக்தி அளிப்பேன் என்ற அவருடைய வார்த்தைகளை நினைவுக் கூறிய பிரதமர் நவீன வாழ்க்கைக்கு எரிசக்தி மிகவும் அவசியமான ஒன்று. புது அரசு பதவி ஏற்ற பிறகு கடந்த 9-10 மாதங்களில் எரிசக்தி உற்பத்தி ஏறத்தாழ 11% அதிகரித்துள்ளது.
வீடுகளுக்கும் தெரு விளக்குகளுக்கும் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவதற்கான அரசின் திட்டத்தை குறிப்பிட்ட பிரதமர் எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
ஊழலை ஒழிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. வெற்றிகரமான நிலக்கரி ஏலம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது மத்திய பிரதேசத்திற்கும் பெரிய பலன் அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சௌகன் மற்றும் மத்திய எரிசக்தி துறையின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. பியூஷ் கோயலும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.