Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

என்.டி.ஆர். பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


என்.டி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தத்துடன், பொதுநலன், நிர்வாக நடைமுறைகள் மீதான அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக என்.டி.ஆர் அன்புடன் நினைவுகூரப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறைக்கு என்.டி.ஆர் ஆற்றிய பங்களிப்புகள், பல்வேறு தலைமுறையாக தொடர்ந்து மக்களை ஈர்த்து வருவதாகவும், அவரது வாழ்க்கைமுறையும், கொள்கைகளும், உத்வேகத்துடன் திகழ்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மாபெரும் தலைவரான என்.டி.ஆர் பிறந்த தினத்தில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ததுடன், பொதுநலன்,  நிர்வாக நடைமுறைகள் மீதான அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்காக அன்புடன் நினைவுகூரப்படுகிறார். திரைத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பல்வேறு தலைமுறையாக தொடர்ந்து மக்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அவரது வாழ்க்கை முறையும்,  கொள்கைகளும், எல்லையற்ற உத்வேகம் அளிப்பதாகத் திகழ்கின்றன. எனது நண்பர் சந்திரபாபு நாயுடு தலைமையில், ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்களுக்காக என்.டி.ஆர் கொண்டிருந்த உயரிய லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியுடன் உள்ளது.”

(Release ID: 2266119)

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266119&reg=3&lang=1

***

TV/SV/PD