Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் இந்தியாவின் பங்கை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்


தில்லியில் மதிப்புமிக்க செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் புரட்சியை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கு ஆகியவை குறித்த தமது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் புதுமை, திறமை, நெறிமுறை சார்ந்த தலைமைத்துவம் ஆகயவற்றின் மையமாக உள்ள இந்தியாவின் தனித்துவமான நிலையை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தில்லியில் செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் நிலையில், செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன், செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டேன்.”

***

(Release ID: 2229433)

AD/PLM/KR