Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் காலவரையறை நீட்டிப்பு


ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் காலவரையறை 31.12.2015 வரை 4 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பின்னணி:

ஏழாவது மத்திய ஊதியக் குழு 28.2.2014 அன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. 28.2.2014 தேதியிட்ட தீர்மானத்தின்படி இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் காலம் 18 மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு 27 ஆகஸ்ட் 2015இல் முடிவடைவதாக இருந்தது.

இதற்கான பணிகள் மிக அதிகமாக இருப்பதால் 7வது மத்திய ஊதியக் குழுவின் கால வரையறை மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.