பி.எம்.இந்தியா
26 செப்டம்பர் 2015 அன்று மேதகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், பிரேசிலின் அதிபர் மேதகு டில்மா ரூசுப் அவர்களையும், மேதகு ஜெர்மன் நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மார்க்கர் அவர்களையும், ஜப்பான் பிரதமர் மேதகு திரு. ஷின்ஸோ அபே அவர்களையும் நியூ யார்க்கில் நடைபெற உள்ள நான்கு நாடுகளின் கூட்டத்துக்கு வரவேற்றார்.
உலகில் தற்போது உள்ள சிக்கல்கள், மற்றும் அதிகரித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், தீர்வு காணவும், நான்கு நாடுகளின் தலைவர்கள், ஒரு வலுவான பாதுகாப்பு கவுன்சில் வேண்டும் என்று வலியுறுத்தினர். சர்வதேச அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் பொறுப்பை ஏற்க 21ம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகள் தயாராக உள்ளன என்பதை இத்தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
2005ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தலைவர்களுக்கான உலக மாநாட்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானித்த பிறகு, இது வரை இது தொடர்பாக எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை இந்நாடுகளின் தலைவர்கள் கவலையோடு பார்த்தனர். பாதுகாப்புக் குழுவை சீர்திருத்தும் அவசர நோக்கத்தை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
69வது கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்தி வரும், பன்னாட்டு பேச்சுவார்த்தைகளுக்கான தலைவரை, இக்கூட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அனைவரின் சம்மதத்தோடு 69வது கூட்டத்தில் 69/560 என்ற வாக்கு விகிதத்தில் 31 ஜுலை 2015 அன்று கூட்டத் தலைவர் வெளியிட்ட வரைவு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பன்னாட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. 70வது கூட்டத் தலைவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதென்றும் உறுதியேற்கப்பட்டது.
எழுத்துபூர்வமான விவாதத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் முயற்சி எடுத்த உறுப்பு நாடுகளின் முயற்சி பாராட்டப்பட்டது. கேரிகோம் எனும் ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பும், எல்.69 என்ற அமைப்பும் சேர்ந்து எடுத்த முயற்சிகள் பாராட்டப்பட்டன. ஆப்பிரிக்காவுக்கு பாதுகாப்பு அவையில் நிரந்தர மற்றும் தற்காலிக பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஒரு விரிவாக்கப்பட்ட மற்றும் சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு அவையில், சிறு மற்றும் நடுத்தர நாடுகள் உறுப்பினராவதையும், தீவு நாடுகள் உறுப்பினர் ஆவதையும் வரவேற்றனர்.
நான்கு நாடுகளின் குழு, ஐக்கிய நாடுகள் அவை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பனிர் ஆவது நியாயமான ஒரு விஷயம் என்பதையும், இந்நாடுகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை பாதுகாப்புக் குழுவுக்கு ஒரு அர்த்தபூர்வமான சீர்திருத்தம் செய்வதில் அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் 70வது கூட்டத்தில், பாதுகாப்புக் குழு சீர்திருத்தம் தொடர்பாக உறுதியான முயற்சிகளை மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
Joining ranks...the G4 leaders meet at a summit hosted by India in New York. @AbeShinzo @dilmabr pic.twitter.com/LwRk5yQMJh
— PMO India (@PMOIndia) September 26, 2015
Reforms in United Nations Security Council has been the focus of global attention for decades – unfortunately, without progress so far: PM
— PMO India (@PMOIndia) September 26, 2015
I am delighted that we are meeting again as Heads of Government after ten years: PM @narendramodi at the G4 Summit in New York
— PMO India (@PMOIndia) September 26, 2015
We live in a fundamentally different world from the time the UN was born: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 26, 2015