Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – II வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் வாழ்த்து


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – II எனும் கண்காணிப்புச் செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பி.எஸ்.எல்.வி. மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – II எனும் கண்காணிப்புச் செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நமது விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள். இந்த வெற்றி நமது விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் பலன்களைச் சாமானிய மனிதர்களுக்குக் கொண்டு சேர்க்கும். இஸ்ரோ குழுவினர் குறித்து பெருமிதம் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.