பி.எம்.இந்தியா
ஐ.நா. சபைக்கு அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியும், தூதருமான திருமதி நிக்கி ஹேலி, பிரதமர் திரு. மோடியை இன்று (27.06.2018) சந்தித்தார்.
அதிபர் திரு. டிரம்பின் வாழ்த்துகளை தூதர் திருமதி ஹேலி பிரதமரிடம் தெரிவித்தார். அதிபர் திரு. டிரம்புக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், ஏற்கனவே தங்களின் சந்திப்புகளையும், கலந்துரையாடல்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் குறிப்பாக, தளத்தகை மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஆழமாவதை தூதர் திருமதி. ஹேலி சுட்டிக்காட்டினார். பயங்கரவாத எதிர்ப்பு, பலதுறை அமைப்புகள் உட்பட இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான வழிவகைகளை இரு தலைவர்களும் விவாதித்தனர். உலக அமைதிக்கும், வளத்திற்கும் முக்கிய அம்சமாக வலுவான இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு தொடரும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.
தெற்காசியா மற்றும் இந்திய – பசிபிக் பகுதிகளில் அதிபர் டிரம்பின் நடைமுறை உத்திகளை பாராட்டிய பிரதமர், கொரிய தீபகற்பத்தில் அணுஆயுத அழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட முன்முயற்சியையும் பாராட்டினார்.
Ambassador @nikkihaley, United States Permanent Representative to the United Nations calls on Prime Minister @narendramodi. https://t.co/zz3idyORai
— PMO India (@PMOIndia) June 27, 2018
via NaMo App