Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் சாலை திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் கட்டமைப்பு மற்றும் சாலைத்தொடர்பு வசதி அதிகரிக்கும் – பிரதமர் மோடி-


ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சாலைத்தொடர்பு வசதி மேம்படுவதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலை எண் 344 ஏ-வில் பக்வாரா- ரூபின்கர் பிரிவை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ஆயிரத்து 444 கோடியே 42 லட்சம் ரூபாயாகும். மொத்தம் 80 .820 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தினால் பஞ்சாபில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுவதுடன் அந்த பகுதியில் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் .

இதுபோன்று ஒடிசா மாநிலம் அங்குல் – சம்பல்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 42 ல் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான திட்ட மதிப்பீடு 2 ஆயிரத்து 491 கோடியே53 லட்சம் ரூபாயாகும். மொத்தம் 151 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் ஒடிசா மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுததுவதுடன், அந்தபகுதியில் சாலை பயண நேரத்தையும், செலவையும் குறைக்க உதவும். குறிப்பாக அங்குல் – சம்பல்பூர் இடையே உள்ள வாகன நெரிசல் குறையும்.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் – தெல்வாடி இடையிலான நெடுஞ்சாலை எண் 211, ஐ நான்கு வழிப்பாடிதையாக மாற்றும் திட்டத்திகும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் திட்டமதிப்பீடு 2ஆயிரத்து 298 கோடி ரூபாயாகும். இந்த திட்டத்தினாலும் அந்தபகுதியில் சமூக பொருளாதார நிலை மேம்பாடு அடையும். அத்துடன் அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்புக்கும் வழி ஏற்படும்.