Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் புதிய இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை அமைத்து செயல்படுத்துதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன-

சங்கங்கள் பதிவுச் சட்டம் 1960ன் கீழ், பெர்ஹாம்பூரில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) அமைக்க ஒப்புதல்.

152.79 கோடி ருபாய் செலவில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் கல்வி நிறுவனத்தினை பெர்ஹாம்பூரில் நடப்பு கல்வியாண்டில் (2016-17) தற்காலிகமாக அமைத்து தற்காலிக வளாகத்தில் மூன்றாண்டுகளுக்கு (2016-19) செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து வகுப்புகளை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான இடத்தினை ஒடிசா அரசு இலவசமாக தர முன்வந்துள்ளதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்திற்கான இயக்குநரை மாதம் 80 ஆயிரம் ரூபாய் (நிலையான) சம்பளத்தில் நியமனம் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி) அறிவியல் கல்வி ஆராய்ச்சி (இரண்டாவது திருத்தம்) மசோதா 2016, (இணைப்பு 3) என்ற பெயரிலான மசோதா வை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் திருப்பதி மற்றும் பெர்ஹாம்பூரை என்.ஐ.டியின் இரண்டாவது அட்டவணையில் சேர்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றங்கள், கருத்துருக்களை உருவாக்குவதற்கு சட்டத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பின்னணி –

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.ஈ.ஆர்) என்பது என்ஐடி, அறிவியல் கல்வி ஆராய்ச்சி ) (என்.ஐ.டி.எஸ்.ஈ.ஆர்) சட்டம் 2012ன் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்க வகை செய்கிறது. அறிவியல் சார்ந்த கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் முதல்தர கல்விக்கும் அதுசார்ந்த ஆராய்ச்சிக்கும் இந்நிறுவனம் உதவும்.

ஏற்கெனவே ஐந்து ஐ.ஐ,எஸ்.ஈ.ஆர் நிறுவனங்கள் கொல்கத்தா, புனே, மொஹாலி, போபால் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ளன. மத்தியில் மோடி அரசு பதவி ஏற்றதும் இதுபோன்ற நிறுவனம் திருப்பதியிலும் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் நிறுவனங்களை அதிகரித்து தரமான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்விக்கு ஊக்கமளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் 2015ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார். ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரிலும் இந்த ஐ.ஐ.எஸ்.ஈ.ஆர் அமைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இன்று மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஐ.ஐ.எஸ்.ஈ.ஆர் பெர்ஹாம்பூரில் தற்காலிகமாக பெர்ஹாம்பூரில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்தில் செயல்படும். இந்த ஆண்டு பி.எஸ்.எம்.எஸ் படிப்புகளில் முதற்கட்டமாக 60 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 3வது ஆண்டில் இது 665 ஆக அதிகரிக்கும். இதில் எம்.எஸ், முதுநிலை படிப்பு, எம்.எஸ். பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு, முதுநிலை முனைவர் படிப்பு ஆகியவையும் இதில் அடங்கும். இந்த தற்காலிக கல்வி நிறுவனம் அமைப்பதற்கான மொத்த திட்டச்செலவு 152 .79 கோடி ரூபாயாகும். இந்த கல்வி நிறுவனத்தினை நிரந்தர இடத்தில் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை தரும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் இந்திய அரசு கேட்டுள்ளது. அதன்பிறகு நிரந்தர வளாகம் கட்டும்பணிகள் தொடங்கும்.