பி.எம்.இந்தியா
போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து துறைகளில் ஆராய்ச்சி, திட்டமிடல், மதிப்பீடு, கண்காணித்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆணையம் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்துத் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள், முகமைகளுக்கு இடையே உரிய திட்டமிடல் இல்லாததால் நீண்ட காலமாக நிலவும் சவால்களுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்புதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறந்த ஒருங்கிணைப்பு, பல்வேறு போக்குவரத்து மாதிரிகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டின் செயல்திறன், நீடித்த தன்மை, பயன் ஆகியவற்றை ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆணையம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆணையம் ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து திட்டமிடல், ஆராய்ச்சி, திட்ட மதிப்பீடு, கண்காணிப்பு, கொள்கை ஆதரவு, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான உயர்நிலை அமைப்பாகச் செயல்படும். சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள், நகர்புறப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்தைக் கொண்ட விரிவான தேசியப் போக்குவரத்து முதன்மை திட்டத்தை இந்த ஆணையம் தயாரிக்கும்.
ரூ.500 கோடி அல்லது அதற்கு அதிகமான செலவுடைய மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொழில்நுட்ப மதிப்பீட்டை ஆணையம் மேற்கொள்ளும்.
நிதிசார் மதிப்பீடு தற்போதுள்ள நிதி மதிப்பீட்டின் நடைமுறைகள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319529®=3&lang=1
***
TV/IR/SM/SH