மாநிலங்களவை உறுப்பினர் ராம்ராவ் வட்குடே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், ஏழைகள், நலிவடைந்த மக்களுக்குச் சேவையாற்றுவதில் அவர் காட்டிய அக்கறையும் எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மாநிலங்களவை உறுப்பினர் திரு ராம்ராவ் வட்குடே மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், ஏழைகள், நலிவடைந்த மக்களுக்குச் சேவையாற்றுவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவும் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். மகாராஷ்டிராவில் பிஜேபி-யை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி.”
****
(Release ID : 2339876)
SK/PLM/RJ
Deeply saddened by the passing of Rajya Sabha MP Shri Ramrao Wadkute Ji. He will be remembered for his contribution to society and emphasis on serving the poor and downtrodden. Equally noteworthy were his efforts to strengthen the BJP in Maharashtra. My thoughts are with his family and admirers. Om Shanti. राज्यसभा खासदार श्री रामराव वडकुते जी यांच्या निधनाचे वृत्त ऐकून अतिशय दुःख झाले. समाजसेवेतील त्यांचे योगदान तसेच गरीब आणि वंचित घटकांच्या सेवेसाठी त्यांनी दिलेले प्राधान्य यासाठी त्यांचे सदैव स्मरण केले जाईल. महाराष्ट्रात भाजप पक्ष संघटना बळकट करण्यासाठी त्यांनी केलेले प्रयत्नही तितकेच उल्लेखनीय होते. या दुःखद प्रसंगी त्यांच्या कुटुंबीयांच्या आणि चाहत्यांच्या दुःखात मी सहभागी आहे. ओम शांती.
— Narendra Modi (@narendramodi) November 22, 2026