Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தானின் கோட்டாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்


ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடாக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி”

****

(Release ID: 2339842)

SK/PLM/RJ