பி.எம்.இந்தியா
முதலீட்டாளர்களின் சேமிப்புகளைப் பாதுப்பதற்கான முக்கியக் கொள்கை முயற்சியாக, பின்வரும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது : –
(a) ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்தல் 2018 சட்ட மசோதா &
(b) சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018
ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்கள் மசோதா 2018-ஐ தடை செய்வது
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்கள் மசோதா 2018-ஐ தடை செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத வைப்புத்தொகை பிரச்சினையைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த மசோதா உள்ளது. இதுபோன்ற திட்டங்களை அளிக்கும் கம்பெனிகள் / நிறுவனங்கள், தற்போதைய ஒழுங்குமுறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் இல்லாதது ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏழைகள் மற்றும் அப்பாவி மக்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தை ஏமாற்றிவருகின்றன.
விவரங்கள் :
ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்தல் மசோதா 2018 மூலமாகச் சட்டவிரோத வைப்புத்தொகை திட்டங்களின் பிரச்சினைகளைப் பின்வரும் வகைகளில் கையாள்வதற்கான விரிவான சட்டம் உருவாக்கப்படும்,
b ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் தொகை பெறப்படும் திட்டங்களை ஊக்குவிக்கும் அல்லது நடைமுறைப்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்;
சிறப்பு அம்சங்கள் :
இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் பின்வரும் வகைகளில் இருக்கும்:
பின்னணி :
அண்மைக் காலங்களில் சட்டவிரோத வைப்புத் தொகை பெறும் திட்டங்களின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால், சட்டவிரோத வைப்புத் தொகை பெறும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு, முழுமையான மத்திய சட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று 2016-17 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டங்களால் ஏழைகளும், நிதி பற்றிய விவரம் தெரியாதவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகள் பெரும்பாலும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத வைப்புத் தொகை திட்டங்களின் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான வரைவு மசோதா பொது மக்கள் பார்வைக்கு முன்வைக்கப் பட்டுள்ளதாகவும், அது இறுதி செய்யப்பட்டதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் 2017-18 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சீட்டு நிதிகள் (திருத்த) மசோதா 2018-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீட்டு நிறுவனங்களின் முறையான வளர்ச்சிக்கு உதவுவதற்கும், சீட்டு நிறுவன தொழிலில் உள்ள சிக்கல்களை நீக்கவும், மக்களுக்கு மற்ற நிதித் திட்டங்களின் வசதிகள் கிடைப்பதை அதிகரிக்கச் செய்யவும், சீட்டு நிறுவனங்கள் சட்டம், 1982-ல் பின்வரும் திருத்தங்கள் முன்வைக்கப் படுகின்றன:
***