பி.எம்.இந்தியா
கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்தியப் பொருளாதார ஈடுபாட்டை விரைவுப் படுத்த ரூ. 500 கோடி மதிப்பிலான திட்ட மேம்பாட்டு நிதியம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த நிதியம் மத்திய வர்த்தகத் துறையில் அமைந்திருக்கும், ஏற்றுமதி இறக்குமதி வங்கி மூலம் செயல்படுத்தப்படும். இந்த நிதியத்தை நிர்வகிக்க வர்த்தகத்துறை செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்று அமைக்கப்படும்.
பின்னிணி:
சி.எல்.எம்.வி.(CLMV) நாடுகள் என்றழைக்கப்படும் கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகள் மண்டல மதிப்புச் சங்கிலியில் தனித்துவமான இடத்தை வகிக்கின்றன. பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் இந்த நாடுகள் சீனா, ஐரோப்பிய யூனியன், இதர நாடுகளின் சந்தைகளுக்கு வழிவாய்ப்பை ஏற்படுத்தயுள்ளன. இந்த மண்டல மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை இடம் பெறச் செய்வதால் இந்திய கச்சாப் பொருள், இடைத்தர பொருட்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தை வசதி கிடைப்பதுடன் இந்தியத் தொழில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடுபொருள் மற்றும் கச்சாப் பொருள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. CLMV மண்டலத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ள நிலையில் இந்த நாடுகளில் இந்தியத் தொழில் முனைவோர் செயல்பாடுகள் தகவல், அடிப்படை வசதி போன்ற பல காரணங்களுக்காக மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த திட்ட மேம்பாட்டு நிதியம் இந்தியத் தொழில்துறையினருக்கு வர்த்தக விரிவாக்கம், போட்டியிடும் விலை கொண்ட விநியோகச் சங்கிலி பராமரிப்பு ஆகியவற்றில் உதவுவதுடன் உலகப் பொருட்கள் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கவும் வாய்ப்பு அளிக்கும்.