Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு பிரதமர் வாழ்த்து


2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மும்முறைத் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரவீன் சித்ரவேல் தமது விளையாட்டு வாழ்க்கையின் சிறந்த தாண்டுதலையும் பதிவு செய்துள்ளதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தச் சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் வெற்றிகளைப் பெற வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மும்முறைத் தாண்டுதல் பிரிவில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றதும், அவர் தமது விளையாட்டுப் பயணத்தின் சிறந்த தாண்டுதலைப் பதிவு செய்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலப் பயணத்தில் அவர் வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்.”

****

(Release ID: 2293176)

TV/PLM/RJ