பி.எம்.இந்தியா
கிளாஸ்கோவில் 2026-ல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்குக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த அற்புதமான செயல்திறன் மூலம், ஒரே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை குல்வீர் சிங் பெற்றுள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும், ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் குல்வீர் சிங்தான் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சாதனையை இந்திய தடகள வரலாற்றில் ஒரு மைல்கல் தருணம் என வர்ணித்துள்ள திரு நரேந்திர மோடி, குல்வீர் சிங்குக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“குல்வீர் சிங் வரலாறு படைத்துள்ளார்! 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான செயல்திறன் மூலம், ஒரே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. இது உண்மையிலேயே இந்திய தடகளத்திற்கு ஒரு மைல்கல் சாதனையாகும். அவருக்கு எனது நல்வாழ்த்துகள்.”
****
(Release ID: 2293261)
TV/PLM/RJ
History made by Gulveer Singh! He wins the Bronze Medal in the Men's 5000 m event at the Commonwealth Games 2026. Congratulations to him. With this remarkable performance, he became the first Indian athlete to win two athletics medals at a single Commonwealth Games. He is also… pic.twitter.com/nFC2oCvP7F
— Narendra Modi (@narendramodi) August 2, 2026