பி.எம்.இந்தியா
கிளாஸ்கோவில் 2026-ல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 90+ கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
போட்டி முழுவதும் அளப்பரிய மன உறுதியை வெளிப்படுத்தியதற்காக நரேந்தர் பெர்வாலைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
வரும் ஆண்டுகளில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என திரு நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 90+ கிலோ குத்துச்சண்டை பிரிவில் நரேந்தர் பெர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி முழுவதும் அளவற்ற மன உறுதியை வெளிப்படுத்திய அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலம் அவருக்கு இன்னும் பல சாதனைகளைக் கொண்டுவரட்டும்.”
****
(Release ID: 2293258)
TV/PLM/RJ
Very happy that Narender Berwal has won a Silver in the Men’s 90+ kg Boxing event at the Commonwealth Games. Congratulations to him for displaying immense courage and determination throughout the competition. May the future bring him several more accomplishments.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 2, 2026