பி.எம்.இந்தியா
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 63 கிலோ ஜூடோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னதி ஷர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
போட்டி முழுவதும் உன்னதி ஷர்மாவின் அர்ப்பணிப்பும் உறுதியும் தெளிவாகத் தெரிந்ததாக பிரதமர் கூறியுள்ளார்.
அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேரட்டும்!
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னதி ஷர்மாவுக்கு வாழ்த்துகள். போட்டிகளின் போது அவரது அர்ப்பணிப்பும் உறுதியும் தெளிவாகத் தெரிந்தன. அவர் வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்”
***
(Release ID: 2293264)
TV/PLM/RJ
More glory for India in Judo!
— Narendra Modi (@narendramodi) August 2, 2026
Congratulations to Unnati Sharma for winning the Bronze Medal in the Women's 63 kg category at the Commonwealth Games 2026. Her commitment and determination were clearly visible during the games. May she keep excelling in all her forthcoming…