பி.எம்.இந்தியா
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
போட்டி முழுவதும் லவ்லினா போர்கோஹைன் சிறந்த திறமையை வெளிப்படுத்தினார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்தச் சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“காமன் வெல்த் போட்டியில் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! அவர் தமது போட்டி முழுவதும் சிறந்த திறமையை வெளிப்படுத்தினார். அவருக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.”
***
(Release ID : 2293184)
TV/PLM/RJ
Proud of Lovlina Borgohain for winning the Silver Medal in the Women’s 75 kg Boxing event! She displayed great skill throughout her games. Congratulations to her. Her dedication and consistency continue to inspire athletes across the nation.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026