Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார்கில் வெற்றி தினத்தன்று வீரத்தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வெற்றி பெற போராடிய அனைத்து துணிச்சல் மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“தனது கடைசி மூச்சு வரை கார்கில் போரில் வெற்றி பெற போராடிய அனைத்து துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் கார்கில் வெற்றி தினத்தன்று அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

எதிரிகளுக்கு மறக்க முடியாத சரியான பதிலடி கொடுத்த இந்த வீரர்களின் துணிச்சலை இந்தியா என்றும் மறக்காது.

1999-ல் கார்கில் போரில் வெற்றி பெற துணையாக இருந்த அரசியல் தலைமைத்துவத்தின் உறுதியையும் பெருமையையும் நாம் இந்நேரத்தில் நினைவு கூர்வோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.