Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்துக்கு பிரதமர் மோடி பயணம். சவுராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசனத் திட்டத்தை தொடங்கிவைத்தார்

குஜராத்துக்கு பிரதமர் மோடி பயணம். சவுராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசனத் திட்டத்தை தொடங்கிவைத்தார்

குஜராத்துக்கு பிரதமர் மோடி பயணம். சவுராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசனத் திட்டத்தை தொடங்கிவைத்தார்

குஜராத்துக்கு பிரதமர் மோடி பயணம். சவுராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசனத் திட்டத்தை தொடங்கிவைத்தார்


குஜராத் மாநிலம், சனோசரா பகுதியில் சவுராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசனத் (SAUNI) திட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இதற்கான கல்வெட்டையும் பிரதமர் திறந்துவைத்தார்.

அஜி-3 அணைப் பகுதிக்கு சென்ற பிரதமர், அணையின் மதகுப் பகுதியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமானோர் மத்தியில் பிரதமர் பேசினார். அப்போது அவர், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியம் என்பதில் எப்போதும் திடமான நம்பிக்கை வைத்திருந்ததை நினைவுகூர்ந்தார். மாநிலத்தில் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

கட்ச் பகுதியில் நமது விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போதிய நீர் கிடைக்காத நிலையிலும் எவ்வாறு நிலைமை மாறியது என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

சவுராஷ்டிரா பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை முதல் முறையாக சந்தித்து, சவுனி திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது பசுமையாக நினைவில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த முயற்சி, குஜராத் மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திய திரு.நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காக பயிர்க் காப்பீடு உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து அவர் விவரித்தார்.

இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா, எல்.இ.டி. பல்புகள் விநியோகம் போன்ற திட்டங்களால், மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை பிரதமர் விளக்கினார்.