Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி


குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:

“நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குஜராத் மாநிலத்தில் நான் இருப்பேன். அகமதாபாத், ராஜ்கோட், மோடாசா மற்றும் காந்தி நகர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன்.

எனது முதல் இரண்டு நிகழ்ச்சிகள், சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும். சபர்பதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதை நான் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

சபர்மதி ஆசிரமத்தில் இரண்டாவது நிகழ்ச்சியாக, மகாத்மா காந்தியின் குரு ஸ்ரீமத் ராஜ்சந்திராஜி-யின் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க உள்ளேன்.

இதனைத் தொடர்ந்து. ராஜ்கோட்டுக்கு சென்று, அங்கு சமூக அதிகாரமளித்தல் முகாமில் (Samajik Adhikarita Shivir) கலந்துகொண்டு, தெய்வீக குணம் (Divyang) கொண்ட என்னுடைய சகோதர, சகோதரிகளுடன் கலந்துரையாட உள்ளேன்.

அஜி அணையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறேன். அங்கு, நீர்ப்பாசனம் மற்றும் நீர் தொடர்பான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

30-ம் தேதி காலை, மொடாசா பகுதியில் வத்ராக், மசும், மெஸ்வோ அணைகளிலிருந்து குடிநீர் விநியோகத் திட்டங்கள் தொடங்கிவைக்கப்படுகிறது.

பல்வேறு இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆதாரமாகத் திகழும், ஜவுளித் துறைக்கு ஆதரவு அளிக்க பல்வேறு திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

30-ம் தேதி மாலை, ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கான “அரேனா திட்டத்தை” நான் தொடங்கிவைக்கிறேன்.

***