Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் காந்தி நகரிலுள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை

குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இந்தப் பல்கலைக்கழகமும் இங்குப் பயிலும் மாணவர்களும் முன்னோடிகளாவர். பெரிதும் பேசப்படும் பாடத்திட்டங்களை அளிக்கும் ஒரு பல்கலைக்கழகம் அல்ல இது. உண்மையில் ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் கவனம் செலுத்தும் பல்கலைக்கழகம். காந்தி நகருக்கான உங்கள் பாதை எளிதான ஒன்றாக இருந்திருக்காது. நீங்கள் இங்கு வரத் திட்டமிட்டபோது, நீங்கள் இதைச் செய்யத் தான் வேண்டுமா? என்று மக்கள் உங்களைக் கேட்டிருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குற்றம் தொடர்பான ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? அல்லது, நீங்கள் பற்பல அகதா கிறிஸ்டி அல்லது ஃபெலுடா புத்தகங்களைப் படிக்கிறீர்கள் தானே? நீங்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான ஒரு பிரிவுப் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இது நீங்கள் உங்களில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல், உங்கள் சொந்தக் கனவுகளைத் தொடர்வதற்கான தீர்மானச் சக்தியையும் கொண்டிருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. இந்தத் தனிச்சிறப்பானது வருங்காலங்களில் உங்களுக்கு எப்போதுமே உதவும்.

நண்பர்களே, ஒரு குறுகிய கால அளவில் குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரப்பதிவுக் குழுவின் ‘ ஏ’ கிரேட் அங்கீகாரத்தைப் பெற்று ஓர் அரிய கல்விச் சாதனையை நிகழ்த்தியுள்ளது பெருமைப்படக்கூடிய ஒன்றாகும். முப்பத்து ஐந்து பாடத்திட்டங்களும், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கொண்ட குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் தடய அறிவியல் துறையின் பல்வேறு பகுதிகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், தலைவர்கள் ஆகியோரை அவர்களின் ஆற்றல், ஈடுபாடு ஆகியவற்றுக்காகவும் அவர்கள் அனைவரும் இந்தப் பல்கலைக்கழகத்தை குஜராத் மற்றும் இந்தியாவின் பெருமைக்குரிய நிறுவனமாக ஆக்கியிருக்கிறார்கள் என்பதற்காகவும் பாராட்டுகிறேன்.

நண்பர்களே, குற்றவாளிகளும் குற்றம் இழைக்கும் வழிமுறைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் குற்றச் சூழலை எதிர்கொள்ள, புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் மேம்படுத்த வேண்டும். விளைவாக, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடாமல் செய்ய வேண்டும். தடயப் புலனாய்வில் மரபணு வரைபடச் சேகரிப்பு புதிய பரிமாணங்களை நிலைநாட்டியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால், அத்தகைய பல வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இல்லாவிட்டால் அவற்றில் பல தீர்க்கப்படாமலேயே இருந்திருக்கும். மரபணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீதித் துறைக்கு இயன்ற அளவுக்கு உதவும்படி தடய வல்லுநர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அதன் விளைவாகக் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் கிடைக்கும். தடயப் புலனாய்வில், மரபணுத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்து, நமது அரசு மரபணுத் தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் செயல்படுத்தல்) ஒழுங்காற்று மசோதா 2018க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின் வாயிலாக, அனைத்து மரபணுச் சோதனைகளும் நம்பகமானதாக இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ளலாம் என்பதுடன், தரவுகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம். அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மரபணு ஆய்வுக் கூடங்களை வலுப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. சண்டிகாரில், மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் ஓர் அதி நவீன ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டுவருகிறது. வரும் நாட்களில், பெண்களுக்கு இழைக்கப்படுவது உள்ளிட்ட, கொடூரமான குற்றங்களை விரைவாகவும் துல்லியமாகவும் ஒடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே, நீங்கள் படிப்பதற்காக மிகவும் பொருத்தமான ஒரு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். தடய அறிவியலின் வகுப்பறைகளில் இருந்து நீங்கள் கற்கும் சில கோட்பாடுகள் வாழ்க்கையின் வகுப்பறையிலும் உங்களுக்கு வேறு தளத்தில் என்றாலும் உதவும் . அவர்கள் தனித்தன்மையின் விதியை உங்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள். அதனை வாழ்க்கையிலும் கடைபிடிக்க எப்போதும் மறந்துவிடாதீர்கள். ஆத்மா ஒவ்வொன்றும் தெய்வீகமானதே என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறுவது வழக்கம். நம்மில் ஒவ்வொருவரும் , நமக்குள், வெடிக்கக் காத்திருக்கும் பிரமாண்டமான வலிமையைக் கொண்டிருக்கிறோம் என்பதே அதன் பொருள். இந்த வலிமையை வெளிப்படுத்துவதன் முதற்படி நம்பிக்கை கொள்வதே. உங்களில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறமைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை நம்புங்கள். நீங்கள் எப்போதும் குற்றங்களைத் தீர்க்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நமது சமூகத்திற்கு சிறந்த விழுமியங்களைத் தர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனுடன், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை மறந்துவிடாதீர்கள். புதிய எண்ணங்கள், பார்வைகள், கருத்துகள் ஆகியவற்றுக்கு உங்கள் மனதைத் திறந்துவையுங்கள். உங்கள் சிந்தனைகளால் உலகைச் செறிவூட்டுங்கள். பிறர் அளிக்கும் சிறந்தவற்றைக் கிரகித்துக் கொள்ளுங்கள். இந்தப் பல்வகைமை உங்களைச் செல்வந்தராக்கும். முன்னேற்ற விதி மாறும் என்று நான் சொல்லும்போது, நீங்கள் கற்றுகொண்டவற்றுக்குத் திரும்புங்கள். வருங்காலத்தையும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா அர்த்தத்திலும் மிகவும் வேகமாக மாறும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். புதிய எண்ணம் பழையதாக மாற நேரம் பிடிக்காது. நீங்கள் மாற்றத்தின் மையமாக மாறுங்கள். உங்கள் கல்வியும் நுண்ணறிவும் வரையறைக்கு அப்பால் சிந்திக்க உங்களைப் பயிற்றுவித்திருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மாற்றங்களுக்காக மட்டுமல்லாமல், இந்தத் தனித்திறமைகளை இந்த உலகை ஒரு சிறப்பான இடத்திற்கு இட்டுச்செல்லும் சில முன்னேற்றமான மாற்றங்களுக்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். வரவிருக்கும் தலைமுறை உங்களுக்கு அதற்காக நன்றி செலுத்தும்.

நண்பர்களே, இளைஞர்களின் பங்களிப்பு இன்றி எந்தத் திட்டம் அல்லது முன்முயற்சியும் வெற்றி பெற முடியாது. இங்கு நீங்கள் பெற்றுக் கொண்ட அறிவு இந்த நாட்டுக்குச் சிறப்பாகச் சேவையாற்றவும் தொழில்முறை வெற்றிய ஈட்டவும் உதவும் என நான் நம்புகிறேன். நீங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தின் மாண்பைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பிரகாசமான, உயிர் துடிப்பான எதிர்காலம் அமைய நான் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***