பி.எம்.இந்தியா

இரண்டு-மூன்று தினங்களுக்குப் பின், நாம் புனிதமான ரக்ஷாபந்தன் விழாவைக் கொண்டாடப்போகிறோம். எனது சகோதரிகளான நீங்கள் அனைவரும் எனக்கு ராக்கியுடன் இங்கே வந்திருக்கிறீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மீது வாழ்த்துக்களை பொழிந்து அவற்றின் மூலம் என்னைப் பாதுகாத்து வருகின்ற எனது நாட்டின் அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ரக்ஷாபந்தன் விழா நெருங்கிவரும் தருணத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் சகோதரிகளின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட தங்களுக்கான வீடுகளைப் பெறவிருக்கின்றனர். ரக்ஷாபந்தன் விழாவின் போது மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஒரு வீடு இல்லாமல் இருப்பதன் வலியை நான் அறிவேன். மொத்த வாழ்க்கையும் குடிசைப் பகுதியில் வாழ்வதிலேயே கழிகிறது. எதிர்காலம் இருள்சூழ்ந்திருக்கிறது, புதிய நம்பிக்கையுடன் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் ஒருவர் எழுந்திருக்கிறார். அந்த நாளின் முடிவில் அது கலைந்து போகிறது.
இருப்பினும், ஒருவர் தனது பெயரில் வீடு பதிவுசெய்யப்பட்ட பிறகு மீண்டும் கனவு காணத் தொடங்குகிறார். பின்னர், இளையவரிலிருந்து முதியவர் வரை ஒட்டுமொத்த குடும்பமும் அந்தக் கனவை நனவாக்க கடுமையான உழைப்பை தொடங்குகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் தொடங்குகிறது.
ரக்ஷாபந்தன் விழாவுக்கு சில நாட்களுக்கு முன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் ஒரு சகோதரனாக இந்த வீடுகளை பரிசாக வழங்குவது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
புனித ரக்ஷாபந்தன் விழாவின் போது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பரிசாக ரூ.600 கோடி மதிப்பிலான மற்றொரு திட்டமும் வரவிருக்கிறது. தண்ணீர் பிரச்சினை என்பது ஒரு குடும்பத்தின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் கூட தண்ணீருக்குத் தாய்மார்களும் சகோதரிகளுமே ஏற்பாடு செய்கிறார்கள். தூய்மையான குடிநீர் கிடைக்காததன் காரணமாக வீடு என்பது நோய்களின் மையமாக மாறிவிடுகிறது. தூய குடிநீர் ஒரு குடும்பத்தை பல நோய்கள் தாக்குவதிலிருந்து தடுக்கிறது.
எனது வாழ்க்கையில் கணிசமான பகுதியை நான் பழங்குடி மக்கள் வாழ்ந்த இடத்தில் செலவிட்டிருக்கிறேன். நான் தரம்பூர் சிதம்பாடியில் தங்கியிருந்த போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தபோதும், தீபாவளிக்குப் பிந்தைய இரண்டு மாதங்களில் குடிநீர் பற்றாக்குறையை இது எதிர்கொண்டது. தரம்பூர், சிதாம்பூர், உமர்கவானிலிருந்து அம்பாஜி வரை ஒட்டுமொத்த பழங்குடி மக்கள் வகித்த பகுதியில் பலத்த மழை பெய்த்து. ஆனால், அந்த்த தண்ணீர் கடலுக்குப் போய்ச் சேர்ந்தது என்பது எனக்கு தெளிவாக நினைவில் உள்ளது. தொடர்ச்சியாக அந்த பகுதிகள் அப்படியேதான் இருந்தன.
நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, உமர்கவானிலிருந்து அம்பாஜி வரையிலுள்ள குஜராத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறேன்.
இப்போது நீங்கள் பார்த்த திரைப்படத்தில் 10 திட்டங்கள் பற்றி கூறப்பட்டிருக்கும். இவற்றில் இன்று 10-வது திட்டம் தொடங்கவிருக்கிறது. ஒரு வீட்டின் 200-வது தளத்தின் உயரத்திலிருந்து தண்ணீர் வருவது போன்று இந்த படத்தில் பார்த்த மக்கள் வியப்பு அடைந்திருக்க வேண்டும். அந்த ஆறு அவ்வளவு உயரத்தில் இருந்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீரை வழங்குகிறது. இதுதான் தொழில்நுட்பத்தின் அதிசயம்.
நமது நாட்டில் மிகவும் தொலைதூரத்தில் உள்ள கீர் வனப்பகுதியில் ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடியை நாம் வைத்திருக்கிறோம். இந்திய தேர்தலிலும் உலகம் முழுவதும் உள்ள தேர்தல் முறையிலும் இது மிகவும் பிரபலமான அம்சமாக உள்ளது. இது பெட்டிச்செய்தியாகவும் ஆகிறது.
இந்தப் புதிய வளர்ச்சியும்கூட ஒரு அதிசயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு கிராமத்தில் 200 – 300 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக உணர்வு பூர்வமான ஓர் அரசு ஒரு கட்டடத்தின் 200 ஆவது மாடிக்கு சமமான உயரத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வருகிறது. நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது அர்ப்பணிப்புமிக்க பணிக்கு இது உதாரணமாகும்.
பழங்குடியின முதலமைச்சர்களுடன் இதற்கு முன்பும் அரசுகள் இருந்துள்ளன. நான் முதலமைச்சராக வருவதற்கு முன்னால், பழங்குடியின முதலமைச்சர்தான் இருந்தார். முதலமைச்சராக வந்த பின், அவரது கிராமத்தை நான் பார்வையிட்டேன். அங்கு குடிநீர் தொட்டிகள் இருந்தன. ஆனால், அவற்றில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை. அந்த கிராமத்திற்கு தண்ணீர் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற அதிர்ஷ்டமாகும்.
நடைப்பயணமாகச் செல்வோருக்கு யாராவது ஒன்று அல்லது இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால், அந்த குடும்பத்தை பல ஆண்டுகளுக்கு மக்கள் அதிக மதிப்போடும், பெருமையாகவும் பார்ப்பார்கள்.
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு கடுமையாக உழைத்த லக்கா பல்தாரா கதைகளை மக்கள் இன்றும்கூட கூறக் கேட்கலாம். ஏன்? அந்த மக்களுக்கு குடிநீர் வழங்க அவர்கள் பாடுபட்டார்கள் என்பதுதான் அதற்கு காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான பிரச்சார இயக்கத்தை குஜராத் அரசு நடத்தி வருவது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இத்தகைய சிக்கலான சில கேள்விகளுக்கு நாம் பதில் தேட முயற்சி செய்கிறோம். எதிர்காலத்தில் குஜராத் எப்படி இருக்க வேண்டும்? ஏழை எளிய மக்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். நமது கனவுகள் என்ன? இந்தக் கனவுகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் என்ன?
அரை மணிநேரத்திலிருந்து முக்கால் மணிநேரத்திற்குள் குஜராத் முழுவதையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் பயணம் செய்து தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் உரையாடினேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் கவனித்துக் கொண்டிருந்த போதும் எனது கண்கள் அவர்களின் வீடுகள் மீதே இருந்தன. அவர்களின் வீடுகளை நான் பார்வையிட்டேன். பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இவ்வளவு அழகான வீடுகள் எப்படி அமைந்தன என்று நீங்கள் வியப்படைந்திருக்கலாம். இது சாத்தியமானதுதான். ஏனென்றால், லஞ்சமும், இடைத்தரகர்களும் அகற்றப்பட்டது.
தில்லியில் உள்ள மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயின் 100 பைசாக்களும் எளிய மக்களின் வீடுகளுக்குப் போய்ச்சேர்ந்ததால், இது சாத்தியமானது. ஊடகம், பத்திரிகை, பொதுமக்கள் முன்னால், லஞ்சம் கொடுத்தீர்களா இல்லையா என்றும் இடைத் தரகர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டியிருந்ததா, இல்லையா என்றும் தாய்மார்களை கேட்கச் செய்யும் துணிச்சல் இந்த அரசுக்கு உள்ளது.
நமக்கு நாமே ஆக்கப்பூர்வமான பிம்பத்தை நாம் கட்டமைத்திருக்கிறோம். தாய்மார்களும், சகோதரிகளும் மிகுந்த நம்பிக்கையோடும், திருப்தியோடும் ‘இல்லை! எவருக்கும் ஒரு பைசாவும் நாங்கள் கொடுக்கவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ், சட்டப்படியான உரிமைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்’ என்று கூறியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகளை நீங்கள் பார்க்கும்போது, அரசால் கட்டப்பட்ட வீடுகள் இவ்வளவு நன்றாக இருக்கிறதே என்று ஆச்சரியப்படக்கூடும் கட்டுமானத்திற்கான நிதியை வழங்கியது அரசு என்பது உண்மை. ஆனால், அதேசமயம் அந்த வீடுகளில் வசிக்கப்போகும் குடும்பத்தினரின் கடுமையான உழைப்பால் அவை கட்டப்பட்டுள்ளன. வீட்டின் வடிவமைப்பை அவர்களே திட்டமிட்டார்கள். எந்த வகையான பொருட்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்தார்கள்.
கட்டுமானப் பணிக்கு அரசு ஒப்பந்ததாரர்களிடம் நாங்கள் பொறுப்பை ஒப்படைக்கவில்லை. அதைவிட, குடும்பத்தினரிடமே பணிப் பொறுப்பை ஒப்படைத்தோம். ஒரு குடும்பம் தனக்கான வீட்டை கட்டும் போது, அதில் ஏற்படும் மகிழ்ச்சி வர்ணிக்க இயலாதது. இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடும்பத்தினரும் மிக அழகான வீடுகளை கட்டியிருக்கிறார்கள்.
ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் வறுமை ஒழிப்பு திட்டம் ஒன்றை நாங்கள் துவக்கியிருக்கிறோம். எல்லா இடங்களிலும் வங்கிகள் இருக்கின்றன. ஆனால், ஏழைகள் அந்த வங்கிகளுக்குள் நுழைய முடியாது. பிரதமரின் மக்கள் நீதித் திட்டத்தின்கீழ், ஏழைகளின் வீட்டைத் தேடி வங்கிகளை கொண்டு வந்தோம்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே, தங்களின் வீடுகளுக்கு மின் இணைப்பைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. தங்களின் வீடுகள் இருளில் இருந்து விடுபடுமா என்று ஏழைகள் எண்ணியிருந்தார்கள். இன்று உஜாலா மற்றும் சவுபாக்யா திட்டத்தின் உதவியால் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்இணைப்பு கிடைக்கும் பொறுப்பை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். வரும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் இந்தியாவில் மின்இணைப்பு இல்லாத வீடுகளே இருக்காது.
கழிப்பறை, மின்இணைப்பு, குடிநீர், சமையல் எரிவாயுவுடன் அடுப்பு போன்றவற்றை ஒவ்வொரு வீட்டிலும் உறுதி செய்வதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் தீவிர மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.
எனதருமை சகோதர, சகோதரிகளே,
குஜராத் மக்களாகிய நீங்கள்தான் என்னை வளர்த்தீர்கள், மேல்நிலைக்குக் கொண்டு வந்தீர்கள், குஜராத் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளன. உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டதால்தான் ஒரு காலவரம்புக்கு உட்பட்டு கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டினை குறிக்கும் 2022-க்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் சொந்தமான வீட்டினை பெற்றிருக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
அரசியல்வாதிகளின் பிரமாண்டமான வீடுகளை படம் பிடித்து காட்டுவது ஒரு காலத்தில் செய்தியாக இருந்தது. ஆனால் இப்போது ஏழை எளிய மக்களின் அழகான வீடுகள் பற்றி ஊடகங்கள் பேசுகின்றன.
வல்சாதுக்கு வந்திருந்து காணொலிக் காட்சி மூலம் புதுமனை புகுவிழாவில் குடும்பங்களோடு இணைந்து உங்களின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் மகிழ்ச்சி கொள்ளும் பிரதமராக நான் இருக்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
கடந்த வாரம் நமக்கு மிகவும் வலிமிகுந்ததாக இருந்தது. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைந்துவிட்டார். ஆனால், அவரது பெயரைத் தாங்கியுள்ள திட்டம் அதாவது, கிராமங்களை தார்ச்சாலைகளால் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் கிராமசாலைகள் திட்டப்பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதற்கு துரிதமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுருங்கச் சொன்னால் தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவரும் திசையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறன் வளர்ச்சி கிடைத்ததற்குப் பின் தொலைதூரத்தில் வாழும் உங்களின் மகள்கள் வேலைவாய்ப்புப் பெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு உதாரணங்களைக் காட்டும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
நாட்டின் பிரச்சினைகள் எளிதாக தீர்க்கப்படும். சாமானிய மக்களின் கனவுகள் நனவாகும். இவற்றையெல்லாம் நிறைவேற்ற தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
வல்சாதின் எனதருமை சகோதர சகோதரிகளே,
ஒருசில நாட்களுக்கு முன்பே நான் இந்த இடத்திற்கு வருவதாக இருந்தேன். ஆனால் மழைக் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இப்போதெல்லாம் மழை பெய்யும்போது அது கொட்டித்தீர்க்கிறது. அப்படியில்லையென்றால் வாரக் கணக்கில் வறட்சி நிலவுகிறது. குஜராத்தின் சில பகுதிகளில் மழை நீரால் வெள்ளம் ஏற்படும் போது, மற்றப் பகுதிகளில் மழையே இல்லை. இருப்பினும், குஜராத்தின் சில பகுதிகள் மழைக்காக வரம்பெற்றுள்ளன. வரும் ஆண்டும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அது வேளாண்மைக்கு அதிகப் பயனளிப்பதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
வல்சாதின் எனதருமை சகோதர சகோதரிகளே,
இந்த கூட்டத்தில் பங்கேற்று நீண்டநேரம் அமைதியாக இருந்த உங்களுக்கு நன்றி. இவ்வளவு பெருந்திரளாக கூடியிருக்கும் உங்களுக்கு நன்றி என்பது மட்டும் போதுமானதாக இருக்காது.
ரக்ஷா பந்தன் விழாவையொட்டி அனைத்து தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
உங்களுக்கு மிக்க நன்றி!
***
I got an opportunity to talk to women across the state today who got their homes under PM Awas Yojana.
— PMO India (@PMOIndia) August 23, 2018
The wonderful homes under PM Awas Yojana are being made possible because there are no middlemen: PM
It is my dream, it is our endeavour to ensure that every Indian has his own house by 2022.
— PMO India (@PMOIndia) August 23, 2018
Till now, we only heard about politicians getting their own homes.
Now, we are hearing about the poor getting their own homes: PM
Today, over a lakh women from Gujarat got Raksha Bandhan gifts- their own homes!
— Narendra Modi (@narendramodi) August 23, 2018
At the programme in Valsad, I witnessed the handing over of these houses and gave certificates as well as employment letters to beneficiaries of various schemes. https://t.co/ghlDKct2rC pic.twitter.com/hMHgjzO87H
In Valsad, laid the foundation stone for the Astole Water Supply Scheme. This scheme will have an extremely positive impact on the lives of the people in the region. By ensuring clean drinking water, it will save several lives from diseases. pic.twitter.com/fLP2UxDccS
— Narendra Modi (@narendramodi) August 23, 2018