Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம், ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில், பிரதமர் பங்கேற்பு

குஜராத் மாநிலம், ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில், பிரதமர் பங்கேற்பு


குஜராத் மாநிலம் ஹஜிராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) கலந்து கொண்டார். பாதுகாப்புத் துறையில், ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) என்ற முன்முயற்சியின் கீழ், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை அவர் பார்வையிட்டார்.

பாதுகாப்புத் துறையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், தற்சார்பு நிலையை அடைவதற்கும், மேற்கொள்ளப்படும் இலக்கு சார்ந்த முயற்சிகளுக்கு இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“குஜராத் மாநிலம் ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) என்ற திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில், நாட்டின் வளர்ந்து வரும் திறன்களை நேரில் கண்டேன். பாதுகாப்புத் துறையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நமது முயற்சிகளுக்கு, இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த உதாரணமாகும்.”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269607&reg=3&lang=1

(Release ID: 2269607)

***

TV/SV/SH