Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் தெரிவித்த வாழ்த்துகளுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


குடியரசுத் தலைவர் தெரிவித்த வாழ்த்துகளுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும், பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்பு, நம்பிக்கை, ஆசியால் ஒவ்வொரு கட்டத்திலும் செதுக்கப்பட்ட இந்த ஆண்டுகள், ஆழ்ந்த மனநிறைவை அளிக்கும் ஒரு சேவைக்கான பயணமாக அமைந்திருந்தன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில், கோடிக்கணக்கான இந்தியர்கள் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் பங்கேற்றதால், நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்த மாற்றம், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண்பதில்  மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டுவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் இந்த வேளையில், அதே கடமை உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்றுவேன் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களே, தங்களது வாழ்த்துகளுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி.

மக்களின் அன்பு, நம்பிக்கை, ஆசியால், ஒவ்வொரு கட்டத்திலும் செதுக்கப்பட்ட இந்த ஆண்டுகள், ஆழ்ந்த மனநிறைவை அளிக்கும் ஒரு சேவைக்கான பயணமாக அமைந்திருந்தன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில், கோடிக்கணக்கான இந்தியர்கள் நம்பிக்கையுடனும், உறுதியுடனும், பங்கேற்றதால், நாட்டின்  முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இந்த மாற்றம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டுவதற்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் வேளையில், அதே கடமை உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்றுவேன்”.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320380&reg=3&lang=1 

(Release ID: 2320380)

****

TV/SV/SH