Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் பார்க் குவன் ஹை-யுடன் பிரதமர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்கள்


மேதகு குடியரசுத் தலைவர் பார்க் குவன் ஹை அவர்களே,
செய்தியாளர்களே,

கொரியா குடியரசில் நான் வருகை புரிந்தது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசுத் தலைவர் பார்க் அவர்கள் எனக்கு அளித்த இதமான வரவேற்பிற்காக நன்றி கூறுகிறேன்.

இன்று குடியரசுத் தலைவர் பார்க் அவர்களுடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இந்தியாவிற்கு வருகைத் தந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்தது.

எனது அரசின் முதல் ஆண்டிலேயே கொரிய குடியரசிற்கு நான் வருகை புரிவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் மாநில முதல்வராக இருந்த போது இந்த நாட்டிற்கு ஏற்கனவே வருகை புரிந்துள்ளேன்.

கொரியாவின் பொருளாதார மேம்பாடு என்னை பிரமிக்க வைக்கிறது. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் கொரியா சாதனை புரிவதையும் நாம் பார்க்க முடிகிறது.

ஆசியாவில் குடியரசு முறையை பாதுகாக்க வலுவான தூணாக கொரியா விளங்குகிறது.

கொரியா அடைந்துள்ள வலுவான முன்னேற்றம் ஆசிய நாடுகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கொரியாவின் வலுவான பொருளாதார முறைமை இந்த மண்டலத்தின் அமைதிக்கும், நிலைத் தன்மைக்கும் மிகச் சிறந்த பங்காற்றியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார நவீனமயமாக்கலில் கொரியா முக்கிய பணியாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்திய பொருளாதாரம் புத்துணர்ச்சி பெறும் காலகட்டத்தில் நான் வருகை புரிந்துள்ளேன். நாட்டின் அனைத்து தொழில் பிரிவுகளின் பொருளாதாரமும், கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றும் முறையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை நவீனப்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டங்களை தற்போது நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்திப் பிரிவு ஆகியவற்றில் சாதனைகளை ஏற்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில், கொரியா முக்கிய பங்காற்ற முடியும்.

வலுவான பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் நமது உறவு தொடங்கியுள்ளது.

நாடுகளுக்கு இடையே உள்ள தொலைநோக்கு பார்வை மதிப்பு ஆகியவற்றுக்கு தேவையான நெருக்கமான உறவுகள் வலுவுள்ளதாக இருந்ததில்லை.

இந்த காரணங்களால் என்னுடைய வருகை எனக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் மேம்பட நாம் இசைந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய இருதரப்பு ஒப்பந்தத்தை எவ்வளவு முக்கியமாக கருதுகிறோம் என்பதற்கு இன்று எடுக்கப்பட்ட முடிவுகளே விளக்கும். இரண்டு பிளஸ் இரண்டு என்ற அடிப்படையில் தூதரக மற்றும் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை இந்தியா மேற்கொண்டுள்ள இரண்டாவது நாடாக கொரிய குடியரசு உள்ளது.

நமது இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்பு குறித்த முடிவுகளை நான் வரவேற்கிறேன்.

நம் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு மேலும் விரிவடைவது குறித்தும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் தயாரிக்கும் ஆகிய பிரிவுகளில் ஒத்துழைப்பை நாங்கள் நாடுகிறோம்.

இந்தப் பிரிவில் மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் பாதுகாப்பு பிரிவில் உரிய நிறுவனங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திரு பார்க் அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார உறவுகள் குறித்து நாங்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

இந்தியாவில் இல்லங்கள் தோறும் கொரியாவில் தயாரான பொருட்கள் உள்ளன. இந்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் என்ற இயக்கத்தின் மூலம் கொரிய நிறுவனங்கள் பங்கு பெறுவதற்கு அதிகமான அளவில் வாய்ப்புகள் உள்ளன என்று குடியரசுத்தலைவர் பார்க் அவர்களும், நானும் ஒப்புக்கொண்டுள்ளோம். கொரியா நாட்டின் வர்த்தக தலைவர்களை நாளை நான் சந்திக்க இருக்கிறேன். இந்தியாவில் கொரிய நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியும்.

கொரியா பிளஸ் என்ற அமைப்பை நாங்கள் நிறுவியுள்ளோம், அதன் வாயிலாக இந்தியாவில் மேலும் மூலதனத்தையும், தொழில் செயல்பாடுகளையும் மேம்படுத்த முடியும்.

புதிய பிரிவுகளில் கொரிய நிறுவனங்கள் பங்கு பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை குடியரசுத் தலைவர் பார்க் ஆதரிக்க வேண்டுகிறேன்.

பாதுகாப்பு சாதனங்கள் மட்டுமல்லாமல் கொரிய நிறுவனங்கள் கப்பல் கட்டுதல் மற்றும் எல்.என்.ஜி டாங்கர்கள் அமைத்தல் போன்ற தொழிற்துறையிலும் ஈடுபட கொரிய நிறுவனங்களை அழைக்கிறேன்.

கப்பல்கட்டும் தொழிலில் நீங்கள் ஒத்துழைப்பதற்கு வசதியாக கூட்டு செயற்குழு ஒன்றை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். எல்.என்.ஜி டாங்கர்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு கொரிய நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. உல்சான் என்னுமிடத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை நாளை நான் பார்வையிட உள்ளேன்.

நம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் மிக சிறிய அளவில்தான் உள்ளது என்பதை நானும், குடியரசுத் தலைவர் பார்க்-கும் ஒப்புக்கொண்டுள்ளோம். இருநாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு குறித்த உடன்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இருநாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகம் மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்கின்ற என் அவாவை நான் தெரிவித்துள்ளேன்.

சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம்.

கொரியா தீபகற்ப பகுதியில் அமைதியும், நிலையான தன்மையும் தொடர்ந்து நிலவிட கொரியா எடுக்கும் முயற்சிகளை நான் வரவேற்கிறேன். அணுஆயுதங்கள் மற்றும் நாசத்தை ஏற்படுத்தும் பிற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கொரியா நாட்டின் கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். கொரிய நாடுகள் அமைதியான முறையில் இணைக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை இந்தியா ஆதரிக்கிறது.

கிழக்கு ஆசிய உச்சிமாநாடு மற்றும் ஆசியான் மாநாடு ஆகிய மாநாடுகளில் நாங்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளோம். மண்டல அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான எங்கள் கவலைகளை நாங்கள் விவாதித்தோம். நமது மண்டலத்தில் கடல் பாதுகாப்பு குறித்து எங்களிடையே ஒருமித்த கருத்துக்கள் உள்ளன.

கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு தேவையான வழிமுறைகளை மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். தீவிரவாதம் மற்றும் கணினி வாயிலான பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் சவால்களை சந்திக்க நாங்கள் ஆர்வம் காட்டியுள்ளோம்.

கொரிய நாட்டின் வருகை இப்போதுதான் தொடங்கியுள்ளது. ஆனால் அது பயனுள்ளதாகவும் இருக்கிறது. இரு பெரிய ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மேலும் வலுப்பட தற்போது அடித்தளம் நாட்டப்பட்டுள்ளது.

நன்றி.

*****