பி.எம்.இந்தியா
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்திய மக்களின் நம்பிக்கையும் பங்கேற்பும் சேவையை மையமாகக் கொண்ட இந்தப் பயணத்தை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்த குடியரசுத் துணைத்தலைவரின் கருத்துகள் மிகுந்த ஊக்கமளிப்பதாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை அடையும் கூட்டுத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, இன்னும் அதிக வலிமையுடன் பணியாற்றத் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகத் திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டாதவது:
“அன்பான வாழ்த்துகளையும் கனிவான வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்ட திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
இந்திய மக்களின் நம்பிக்கையும் பங்கேற்பும் சேவையை மையமாகக் கொண்ட இந்தப் பயணத்தை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தியுள்ளன.
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பற்றி நீங்கள் பகிர்ந்துள்ள கருத்துகள் மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த நமது கூட்டு தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, இன்னும் அதிக வலிமையுடன் பணியாற்ற உறுதிபூண்டுள்ளேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320382®=3&lang=1
****
TV/BR/SH