Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கும்பமேளா ; கன மழையால் உயிர் இழப்பு – பிரதமர் இரங்கல் கும்பமேளாவில் உள்ள துறவிகள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்


கும்பமேளாவில் கடும் மழையால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். கும்ப மேளாவில் பங்கேற்கும் துறவிகள், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரதமர் பிரார்த்தனை மேற்கொண்டார்.

கும்பமேளாவில் கடும் மழையால் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த துயரத்தில் இருந்து மீண்டுவர இறைவன் அவர்களுக்கு வலிமையை அளிக்கட்டும்.

காயம் அடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். கும்ப மேளாவில் பங்கேற்கும் துறவிகள், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.