பி.எம்.இந்தியா
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, குரோஷிய பிரதமர் மாண்புமிகு திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், மாண்புமிகு திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக், செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2026 பிப்ரவரி 18-21 வரை இந்தியாவில் தங்கவுள்ளார். குரோஷிய பிரதமர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இணைப்பு, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை இருவரும் விவாதித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த அவர்கள், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக, ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். பரஸ்பர விருப்பமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்தியாவின் ஆரோக்கிய பாரம்பரியமான யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் குரோஷியாவின் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பிரதமர் திரு மோடி வெகுவாகப் பாராட்டினார்.
பிரதமர் திரு மோடி, 2025 ஜூன் மாதத்தில் குரோஷியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டிருந்தார், இது ஒரு இந்தியப் பிரதமரின் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
(Release ID: 2229824)
****
TV/BR/SH
Held fruitful discussions with the Prime Minister of Croatia, Mr. Andrej Plenković. We discussed how to add momentum to our bilateral partnership in areas such as technology, innovation, shipbuilding, blue economy and boosting connectivity through the IMEEC corridor. Also… pic.twitter.com/lGI1pKHIVI
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
Održao sam produktivan razgovor s predsjednikom Vlade Republike Hrvatske, g. Andrejem Plenkovićem. Razmotrili smo mogućnosti dodatnog osnaživanja našeg bilateralnog partnerstva, s posebnim naglaskom na produbljivanje suradnje u područjima tehnologije, inovacija, brodogradnje te… pic.twitter.com/AQ6gaHw1fE
— Narendra Modi (@narendramodi) February 18, 2026