பி.எம்.இந்தியா
இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026 இல் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தந்த பூட்டான் பிரதமர் மேதகு திரு ஷெரிங் டோப்கேவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
2025 நவம்பரில் பிரதமர் திரு மோடி பூட்டானுக்கு மேற்கொண்ட பயணத்தின் மிகவும் வெற்றிகரமான விளைவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பூட்டானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கும், கெலேஃபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி திட்டத்திற்கும் இந்தியா அளித்த ஆதரவிற்காக பூட்டான் பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்தார். எரிசக்தி, இணைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மை போன்ற முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் பூட்டானும் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதன் மூலமும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை இணைந்து மேம்படுத்துவதன் மூலமும், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவும் பூட்டானும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடிப்படையில் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான உறவுகளை பகிர்ந்து கொள்கின்றான். பூட்டான் பிரதமரின் வருகை, இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான வழக்கமான உயர் மட்ட பரிமாற்றங்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி குறிப்பிட்டிருப்பதாவது:
“”பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. உலகளாவிய நன்மைக்காகவும், நிலைத்தன்மையின் கொள்கைகளுக்கு இணங்கவும், செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்.
பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளில் வேரூன்றிய இந்திய-பூட்டான் இடையேயான நீடித்த நட்பு, எங்கள் கூட்டாண்மையை புதிய மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் களங்களுக்குத் தொடர்ந்து வழிநடத்துகிறது.
@tsheringtobgay”
(Release ID: 2229821)
****
TV/BR/SH
The meeting with PM Tshering Tobgay was outstanding. We discussed how we can harness the power of AI for global good and in harmony with principles of sustainability.
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
Our enduring India-Bhutan friendship, rooted in mutual trust, goodwill and close ties between our two peoples,… pic.twitter.com/oWBUXmR7EW
བློན་ཆེན་ཚེ་རིང་སྟོབས་རྒྱས་དང་གཅིག་ཁར་ཕྱད་མི་འདི་ མཆོག་ཏུ་གྱུར་པ་ཅིག་ཨིན་མས། ང་བཅས་ཀྱིས་ ཡུན་བརྟན་གཞི་རྩ་དང་གཅིག་ཁར་ ཞི་བདེ་དང་ལྡནམ་སྦེ་ རྒྱལ་སྤྱིའི་ཁེ་ཕན་གྱི་དོན་ལུ་ བཅོས་རིག་གི་ནུས་པ་འདི་ ག་དེ་སྦེ་ལག་ལེན་འཐབ་ནི་ཨིན་ན་ གྲོས་བསྡུར་འབད་ཡི།
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
རྒྱ་གར་དང་འབྲུག་གི་བར་ན་… pic.twitter.com/aQX0Fzynbt