பி.எம்.இந்தியா
மேதகு அதிபர் விளாதிமிர் புடின் அவர்களே,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே,
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களே,
அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களே,
அன்புமிக்க நண்பர்களே,
நமஸ்கார்
வணக்கம்.
இன்று நமக்கு ஒரு நன்னாள்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கும் கவுரவத்தை அதிபர் புடினும் நானும் பெற்றுள்ள நன்னாள் இது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தமைக்காக அதிபர் புதின் அவர்களுக்கு குறிப்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நம்முடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
நண்பர்களே
கூடங்குளம் முதல் அலகை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்திய-ரஷ்ய உறவின் மற்றுமொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நாம் பதிவு செய்கிறோம்.
வெற்றிகரமாக அது நிறைவு செய்யப்பட்டிருப்பது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மிக்க நெருக்கமான பங்களிப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு மட்டுமின்றி,
நமது நட்புறவுக்கான விழாவும் ஆகும்.
இந்த துறையில் நம்மிடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்புக்கு இது ஒரு தொடக்கம் தான்.
ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் என்பது சாதாரணமாக காணப்படுவது அல்ல. அந்த வகையில் இந்தியாவின் மின்நிலையங்களில் கூடங்குளம் முதல் அலகு பிரம்மாண்டமானது என்ற இந்த தனித்தன்மையை பெறுகிறது.
வரும் காலங்களில் அணுமின் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வது என்ற செயல் திட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை அர்ப்பணிப்பதில் நாம் இணைந்திருப்பது மிகவும் பொருத்தமானது.
இந்திய-ரஷ்ய நட்புறவு வாழ்க!
இந்த அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்காக அதிபர் புடின் அவர்ளே, உங்களுக்கு மீண்டும் எனது நன்றிப் பெருக்கை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
நன்றி.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
Kundankulum 1 is an important addition to India's continuing efforts to scale up production of clean energy in India: PM Modi
— PMO India (@PMOIndia) August 10, 2016
Kudankulam 1 also signals our joint commitment to build pathways of partnership for green growth: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 10, 2016
I have always deeply valued our friendship with Russia & it is fitting that we jointly dedicate Kudankulam Nuclear Power Plant Unit 1: PM
— PMO India (@PMOIndia) August 10, 2016