பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கொடுமையான திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்காக இந்தியா, பிரிட்டன், வடக்கு அயர்லாந்து இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குற்றச் செயல்களில் விசாரணை நடத்துதல், தண்டனை வழங்குதல் மற்றும் கண்காணித்தல், தடுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு (பணப் பரிமாற்றத்தை உள்ளடக்கிய குற்றங்கள் உள்பட) காரணமான கருவிகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் தீவிரவாத நிதிகளை பறிமுதல் செய்வதற்காக. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த 1995-ம் ஆண்டில் கையெழுத்தானது. சர்வதேச குற்றச் செயல்கள் மற்றும் கொடுமையான திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இது பரஸ்பரம் பயனளிக்கும்.
****