Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தா இந்துஸ்தான் கேபிள்ஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


1956 / 2013 கம்பெனிகள் சட்டம், 1947 தொழிலியல் தாவாக்கள் சட்டம், இதர தொடர்புடைய சட்டங்களின்படி கொல்கத்தா இந்துஸ்தான் கேபிள்ஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 2007 – ம் ஆண்டு நிலவும் ஊதிய விகிதங்களின்படி மிகவும் சிறப்பான தொகைகள் தாமாகவே முன்வந்து ஓய்வுபெறும் திட்டம் தாமாகவே முன்வந்து விலகிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். 2015 ஏப்ரல் முதல் ஊழியர்கள் இந்த நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்ளம் தேதிவரையிலான ஊதியம் மற்றம் இதர அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகளும் வழங்கப்படும். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் நலிவுறும் போதும் நஷ்டத்தில் இயங்கும் போதும் அவற்றை மூடுவதற்கான அரசுத்துறை நிறுவனங்கள் துறையின் நெறிமுறைகளின் படி இந்த நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த நிறுவனத்தை மூடுவதற்கு ரொக்கமாக ரூ. 1,309.90 கோடியும் ரொக்கம் அல்லாத இனமாக ரூ. 3,467.15 கோடி மத்திய அரசு பங்குகளை மாற்றுவதற்கான கடன் தொகை (வட்டி உள்பட 30.09.2016 நிலவரப்படியான கடன்களை) செலுத்துவதற்கும் வழங்கப்படும்.

கொல்கத்தா இந்துஸ்தான் கேபிள் நிறுவனத்திற்கு ஜாமீனுடன் கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான குழு நிறுவனங்கள் தாராளமான ஆதரவை வழங்கியுள்ளனர். இவ்வாறு கடன் வழங்கிய நிறுவனங்கள் அனைத்து ஜாமீன் கடன்களுக்கும் என வட்டியை அகற்றிக் கொள்வதற்கும் முதல் தொகையாக ரூ. 305.63 கோடியைப் ஒரே முறை தீர்வாகப் பெற்றுக் கொள்வதற்கம் ஒப்புதல் அளித்துள்ளனர்.

2003 ஜனவரிக்குப் பிறக இந்த நிறுவனத்தில் உற்பத்தி நடவடிக்கை ஏதும் இல்லை. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 1997 உதிய விகிதங்களில் ஊதியம் பெற்று வருகின்றனர். ஊதியமும் சம்பளமும் வழங்கப்படாத காரணத்தால் ஊழியர்கள் தங்களது நிதித் தேவை உள்ளிட்ட அனைத்து தேவைகளையம் சமாளிக்க கஷ்டப்பட்டனர். தாமாகவே முன்வந்து ஓய்வு பெறும் / விலகிக் கொள்ளும் திட்டத்தின்படி இதர நிலுவைத் தொகைகளையும் சேர்த்து கிடைக்கும் தொகை காரணமாக இந்த ஊழியர்கள் நிதிச் சிக்கலிலிருந்து விடுபட முடியும். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மறுவாழ்வுப் பணிகளுக்கும் இது உதவும். காலக் கெடுவுடன் இந்த நிறுவனம் மூடப்படுவதால் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க சொத்துக்கள் வேறு நல்ல பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

பின்னனி:

இந்துஸ்தான் கேபிள் நிறுவனம் 1952 – ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதற்கு மேற்கு வங்காளம் ரூப்நரைன்பூர், தெலுங்கானா ஐதராபாத், உத்திரப்பிரதேசம் நைனி, மேற்கு வங்காளம் நரேந்திரப்பூர் ஆகிய இடங்களில் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் பதிவு பெற்ற அலுவலகம் கொல்கத்தாவில் உள்ளது. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகியவற்றுக்கு தொலைத் தொடர்புக் கேபிள்கள் தயாரித்து வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஒயர் இணைப்புக்கு பதிலாக ஒயர்லஸ் இணைப்பு போன்ற விரைவான மாறுதல்கள் ஏற்பட்டதை அடுத்து தொலைத் தொடர்பு கேபிள்களுக்கான தேவை வெகுவாக குறைந்து போனது. இந்த நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்ட கனரகத் தொழில்கள்துறை பலமுறை முயன்றது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. இந்த நிறுவனத்தின் பிரிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் / பாதுகாப்பு உற்பத்திதுறை ஆகியவற்றுக்கு மாற்றித்தர எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இந்த ஆலையை மூடிவிடும் நடவடிக்கை தொழிலியல் நிதி மறுசீரமைப்பு வாரியம், பொதுத்துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியம் ஆகியவற்றின் பரிந்துரைகள் அடிப்படையிலும் 29.12.2014 அன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நலிந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு திட்டம் சாராத பட்ஜெட் ஆதரவு அளிப்பதற்கு ஒப்புதல் அளித்த வரைபட திட்டத்தின்படியும் எடுக்கப்பட்டது.

2002 முதல் இந்த நிறுவனம் தொழிலியல் நிதி மறுசீரமைப்பு வாரியம் பரிந்துரை செய்த நிறுவனமாக உள்ளது. இந்த ஆலையை மூடிவிடுவதற்கான இந்திய அரசின் முடிவு இந்த வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மிகவும் கவர்ச்சியான தாமாகவே முன்வந்து ஓய்வு / விலகிவிடும் திட்ட பயன்கள் அளிக்கப்படும். 1947 தொழிலியல் தாவாக்கள் சட்டத்தின்படியான பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனத்திற்கு ஜாமீனுடன் 4டிய கடன் வழங்கியவர்களின் இந்த நிறுவனத்தின் நில சொத்துக்கள் மீதான ஜாமீனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிறுவனத்தின் இதரக் கடன்கள், இதனை மூடும்பொது ஏற்படும் சட்டரீதியான கடன்கள் சட்டப்படியும் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் நெறிகளின்படியும் தீர்த்து வைக்கப்படும்.