Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோலாலம்பூரில் பிரதமரின் முக்கிய நிகழ்வுகள்

கோலாலம்பூரில் பிரதமரின் முக்கிய நிகழ்வுகள்

கோலாலம்பூரில் பிரதமரின் முக்கிய நிகழ்வுகள்

கோலாலம்பூரில் பிரதமரின் முக்கிய நிகழ்வுகள்

கோலாலம்பூரில் பிரதமரின் முக்கிய நிகழ்வுகள்

கோலாலம்பூரில் பிரதமரின் முக்கிய நிகழ்வுகள்


ஆசியான் மாநாட்டில் பங்கேற்கிறார்.

சீன மற்றும் ஜப்பானிய அதிபர்களை சந்திக்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இன்று கோலாலம்பூரில் இந்திய ஆசியான் மாநாட்டில் உரையாற்றினார்.

“உலகின் முன் உள்ள பல்வேறு சவால்கள், பொருளாதார நிலையின்மை, அரசியல் குழப்பம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் ஆகியவை நிலவும் சூழலில் நாம் சந்திக்கிறோம். இந்த சூழலில் இந்தியாவும் ஆஸியானும் இரு நம்பிக்கை ஒளிகள்” என்று தனது துவக்க உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

” இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் மிகப் பெரியன. ஆகையால், இந்தியாவில் பொருளாதார வாய்ப்புகள் ஏராளம். தற்போது, ஒரு வரவேற்கத் தகுந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம். தொழில செய்ய ஏதுவான நாடுகளுக்கான உலக வங்கியின் பட்டியலில், இந்தியா முன்னேறியுள்ளதே இதற்கு சான்று. பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாகவும், துணிவாகவும் மேற்கொள்வோம். ஆசியானின் பொருளாதாரம், புதிய வேகத்துடன் முன்னேறி வருகிறது. எங்களின் 1.9 பில்லியன் மக்களுக்கு வளத்தை அளிப்போம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார் பிரதமர்.

” இணைப்பு என்பது பகிரப்படும் வளத்துக்கான பாதையாக இருக்கிறது. முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது 2018க்குள் நிறைவடையும்” என்றார் அவர்.

“ஆசியான் – இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி நிதியை தற்போது உள்ள 1 மில்லியன் டாலர்களில் இருந்து 5 மில்லியன் டாலர்களாக அதிகரிக்க உள்ளோம். ஆசியான் – இந்தியா கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பை ஏற்படுத்தி, குறைந்த செலவு தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பப் பகிர்தல்கள் மற்றும் ஆராய்ச்சிகளை வளர்க்க உள்ளோம்” என்றார் பிரதமர்.

ஆசியான் மாநாட்டையொட்டி, சீன நாட்டின் அதிபர் திரு லீ கிகியாங் அவர்களை சந்தித்தார்.

உலகில் தற்போது நிலவும் பொருளாதார தேக்கநிலை, தட்பவெட்ப மாற்றம் மற்றும் சர்வதேச தீவிரவாதம் குறித்து இருதரப்பும் ஆய்வ செய்தது. பொருதார தேக்கநிலை நீடித்தாலும், இந்தியா தனது வளர்ச்சி விகிதத்தை பராமரித்து வந்ததாக சீன அதிபர் குறிப்பிட்டார். பாரீசில் நடைபெற உள்ள COP 21 மாநாட்டுக்கான ஆயத்தங்களை இரு நாட்டுத் தலைவர்களும் ஆய்வு செய்தனர். இந்தியா முன்னெடுக்கும் சூரிய ஒளி கூட்டணி குறித்து விளக்கிய பாரதப் பிரதமர், சீனாவை அதில் இணையும்படி அழைப்பு விடுத்தார். உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம் என்பதை ஒப்புக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்களும், உலக நாடுகள் இதை எதிர்த்து ஒன்று கூட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை குறிப்பிட்டார். திறன் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மதிய உணவு விருந்தளித்தார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான கூட்டுறவு, உலகின் மற்ற நாடுகளிடையே உள்ள கூட்டுறவைப் போல சிறப்பு வாய்ந்தது என்று திரு ஷின்ஸோ அபே அவர்கள் குறிப்பிட்டார். இரு தரப்பு உறவுகள் குறித்து ஜப்பான் பிரதமரின் கருத்தை ஒப்புக் கொண்ட பிரதமர், திரு ஷின்ஸோ அபே அவர்களின் இந்திய விஜயத்தை எதிர்ப்பார்ப்பதாக கூறினார். பல்வேறு மாறுதலுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட, டெல்லி மும்பை தொழில் வளாகம் போன்ற பல்வேறு திட்டங்களில் ஜப்பான் பங்கு கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிராந்திய இணைப்பு, கடல் பாதுகாப்பு, எதிர்வரும் COP 21 மாநாடு, ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு குழுவில் சீரிதிருத்தம், மற்றும் தீவிரவாதம் போன்றவை இருதரப்பு விவாதங்களில் இடம்பெற்றன.

*****