பி.எம்.இந்தியா
மரியாதைக்குரிய விருந்தினர்களே, கனவான்களே சீமாட்டிகளே, வணக்கம்,
கடவுளின் பூமி எனப் போற்றப்படும் கேரளத்தில் நடைபெறும் உலக ஆயுர்வேதத் திருவிழாவின் ஒரு பகுதியான நெடுநோக்கு மாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பாரம்பரிய ஆயுர்வேதத்தில் கேரளா மைய இடம் வகிக்கிறது. இந்த மாநிலத்தில் ஆயுர்வேதம் நீண்ட காலமாக தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது மட்டுமே இதற்கு காரணம் அல்ல. கேரளாவின் மருந்துகளும் சிகிச்சைகளும் உலக அளவில் பிரபலமாகி மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவமனைகளும் ஆரோக்கிய மையங்களும் வேகமாக வளர்ந்து வருவதும் முக்கிய காரணமாகும்.
இந்த 5 நாள் உலக ஆயுர்வேத திருவிழா பங்கேற்பு அடிப்படையிலும் ஆயுர்வேதத்தின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்துவதிலும் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. என்று எனக்கு சொல்லப்பட்டுள்ளது.
இந்த ஆயுர்வேதத் திருவிழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து பெறும் எண்ணிக்கையில் வெளி நாட்டுப் பிரதிநிதிகள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களது பங்கேற்பு ஆயுர்வேதத்தைப் பரப்புவதில் பெரிய உத் வேகத்தை அளிக்கும் என்பது உறுதி.
இந்தியாவில் ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம் போன்ற நமது சொந்த வைத்திய முறைகளை உருவாக்கிய நீண்ட பாரம்பரிய மிக்க ஞானிகளும் முனிவர்களும் வாழ்ந்திருந்தனர்.
காலம் செல்லச் செல்ல நாம் இதர நாகரீகங்களுடன் தொடர்பு கொண்டு இதர மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிக் கொண்டோம்.
இந்த மருத்துவ முறைகள் அனைத்தும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவை.
ஆயுர்வேதம் வாழ்க்கையின் அறிவியல் என வரையறுக்கப்படுகிறது. ஆயுர் என்ற பதத்தை வாழ்க்கை என்றும் வேதா என்ற பதத்தை அறிவியல் என்றும் மொழி மாற்றம் செய்து இந்த வரையறை செய்யப்பட்டுள்ளது. சஷ்ருதா ஆரோக்கியத்தை இவ்வாறு வரையறை செய்கிறார்:
சம்தோஷா, சமாக்கினி, சம்தாது மலக்கிரியா பிரசன்னாத்துமா, இந்திரியாஸ் மானா ஸ்வாத் அபிதயாத்தி.
இதன் பொருள் 3 தோஷங்கள் அதாவது உயிரிசக்தி மற்றும் அக்னி அதாவது வளர்சிதை நடைமுறை ஆகியன சமநிலையில் இருந்தால் ஆரோக்கியம் சமநிலையில் இருக்கும். மேலும் கழிவுகள் சரியான படி இருக்கும். ஆத்மன் அதாவது ஆன்மா, உணர்வுகள், மானா அதாவது புத்தி ஆகியவை உள் அமைதியடன் நல் இணக்கத்தில் இருந்தால் ஸ்வஸ்தா அதாவது நல்ல ஆரோக்கியம் எட்டப்படும்.
இந்த விளக்கத்தை ஊரக சுகாதார அமைப்பு பயன்படுத்தும் வரையறையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் என்பது உடல் மனம் சமூகம் சார்ந்த முழுவதுமான நல்ல நிலைமை, அது நோய் அல்லது வயோதிகம் இல்லாமல் இருப்பது ஆகாது. இதிலிருந்து ஆயுர்வேதத்தின் கொள்கைகள் எவ்வாறு மிகச் சிறப்பாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த ஆரோக்கியத்துடன் ஒத்துப் போகிறது. என்பது தெரியவரும்.
ஆரோக்கியம் என்பது நன்றாக இருக்கும் முழுமையான நிலைமையே தவிர நோயற்ற நிலைமை அல்ல.
இன்று ஆயுர்வேதம் உலகளவில் தேவையானதாகவே உள்ளது. ஏனெனில் அது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை முழுமையான விரிவான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
ஆயுர்வேத தின்சாரியா அல்லது தினப்படி பட்டியல் ஒருவரது வாழ்க்கையில் அமைதியையும் நல்லினக்கத்தையும் ஏற்படுத்த உதவுகிறது. ஆயுர்வேத தினப்படி வாழ்க்கை நடவடிக்கைகள் மனிதனின் உடல் மற்றும் மனம் சார்ந்த மொத்த ஆரோக்கியத்தைப் பெருக்கி அமைக்கிறது.
இன்றைய உலகில் பெரும் சுகாதார சவால்களாக இருப்பவை எவை? தொற்று அல்லாத நோய்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று நோய் போன்ற வாழ்க்கைத்தரம் தொடர்பான நோய்கள், மிகப் பெரிய சுகாதார சவால்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தொற்று அல்லாத நோய்கள் காரணமாக 38 மில்லியன் பேர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் ஏறக்குறைய முக்கால் பங்கு அதாவது 28 மில்லியன் மரணங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ஏற்படுகின்றன. இந்த நோய்களை கையாள்வதில் தான் ஆயுர்வேதம் சிறந்த தீர்வுகளை அளித்து வருகிறது.
ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகளை உருவாக்கிய நீண்ட பாரம்பரிய வழிவந்த ஞானிகளும் முனிவர்களும் இயற்கையுடன் இணக்கமான வாழ்க்கை முறையை வலியுறுத்துகின்றனர்.
இந்த முறைகள் சுற்றுச்சூழலுக்கு வந்த நடைமுறைகளின் மூலம் சம நிலையை உருவாக்கி ஆரோக்கியத்தை பேணுகின்றன. மூலிகை ஆதாரங்களை தொடர்ந்து வழங்குவதன் மூலமும் ஆரோக்கியம் பேணுகின்றன.
துரதிருஷ்டவசமாக ஆயுர்வேதாவின் உண்மையான திறன் பல்வேறு காரணங்களால் பயன்படாமல் உள்ளது. முக்கியமாக போதுமான அறிவியல் ஆய்வு இன்மையும், தரங்கள் குறித்த அக்கரை இன்மையும் காரணங்களாகும்.
இந்தப் பிரச்சினைகள் சரியாக கையாளப் பட்டால் பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆயுர் வேதம் சிறந்த தீர்வை அளிக்க முடியும் என நம்புகிறேன். இந்தியா அதிக விலையில்லாத முழுமையான மருத்துவ சேவையை உலகிற்கு வழங்குவதில் முதன்மை நாடாக இருக்க இயலும்.
இந்தப் பிரச்சினைகளைக் கையாள நாம் என்ன செய்ய முடியும், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
ஆயுர்வேதத்தையும் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் மேம்படுத்த நமது அரசு முற்றிலும் உறுதியுடன் உள்ளது. இந்த அரசு அமைந்தவுடன் ஆயுஷ் துறை மேம்படுத்தப்பட்டு மத்திய அரசின் முழு அமைச்சக அந்தஸ்த்தைப் பெற்றது.
ஆயுஷ் மருத்துவ முறையை மேம்படுத்த தேசிய ஆயுஷ் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் அதிக விலையில்லாத ஆயுஷ் சேவைகள், கல்வி முறையை வலுப்படுத்துதல், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருந்துகளில் தரக் கட்டுபாடுகளை அமல்படுத்துதல் ஆகியவற்றின் மூலமும், கச்சாப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கச் செய்வதன் மூலமும் ஆயுஷ் மருத்துவ முறை மேம்படுத்தப்படுகிறது.
ஆயுஷ் மருந்துகள் தரக் கட்டுப்பாட்டுக்கு மத்திய மாநில நிலைகளில் திறம்பட்ட அமலாக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு வரன்முறை திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மத்திய மருந்துகள் தரங்கள் கட்டுபாட்டு அமைப்பில் ஆயுஷ் மருந்துகளுக்கு செங்குத்து அமைப்பை உருவாக்குவது, தவறான விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது, தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு தரக் கட்டுப்பாடு செயல்களுக்கும் இதர முக்கிய செயல்பாடுகளுக்கும் நிதி உதவி வழங்குவது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
யோகா நிபுணர்களின் அறிவையும் திறனையும் உறுதிப் படுத்த யோகா பணியாளர்களுக்கான தாமே சான்றளிக்கும் திட்டம் சென்ற ஆண்டு ஜுன் 22 ந் தேதி தொடங்கப்பட்டது. யோகா மற்றும் முழுமையான ஆரோக்கியத்துக்கான சர்வதேச மாநாட்டின் போது இத் திட்டம் தொடங்கியது.
ஆயுர்வேதா மற்றும் இதர இந்திய மருத்துவ முறைகள் குறித்த நமது கொள்கை உலக சுகாதார அமைப்பின் 2014 – 2023 பாரம்பரிய மருத்துவ அணுகு முறையுடன் ஒருங்கிணைந்து உள்ளது. இந்த அணுகு முறை 192 உறுப்பு நாடுகளில் அமல் படுத்துவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
உலக சுகாதார அமைப்பின் அணுகு முறையில் பாரம்பரிய மற்றும் முழுமைப்படுத்தும் மருத்துவ முறைகளின் ஆரோக்கியம், உடல் நலம், தனிநபர் மைய மருத்து முறை சார்ந்த திறன்களை பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் அடங்கியுள்ளன.
சுவாமி விவோகானந்தரின் வார்த்தைகளில் சொன்னால் நாம் கிழக்கின் சிறந்தவற்றை மேற்கின் சிறந்தவற்றுடன் இணைப்போம்.
நவீன மருத்துவ முறையில் திறம்பட்ட வலுவான நோயறி கருவிகள் உள்ளன. இதனால் நோய்களை எளிதாகவும் முன்கூட்டியும் கண்டுபிடிக்க முடிகிறது. மருத்துவ முறைகளில் தொழில் நுட்ப பயன்பாடு மருத்துவத்தை கிடைக்கச் செய்வதில் உள்ள தடைகளைக் குறைத்து நோய்கள் குறித்த நமது அறிவை மேம்படுத்தும்.
எனினும் நாம் இதற்கு அப்பாற்பட்டும் பார்க்க வேண்டியுள்ளது. மருத்துவ வசதி வழங்குவதற்கு அப்பாற்பட்டு உடல் மற்றும் மன நலன் இணைந்த நல்ல ஆரோக்கியத்தை தேடுவதில் நாம் முனைப்புடன் செயல் பட வேண்டும்.
மருத்துவ சிகிச்சையில் அதிகரித்து வரும் கட்டணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை மருத்துவ நிபுணர்களை பாரம்பரிய மருத்துவ முறையை பற்றி சிந்திக்க தூண்டியுள்ளது.
நமது பொது சுகாதார முறைகளில் பாரம்பரிய மருந்துகள் பயன்பாட்டை மேம்படுத்த நாம் உறுதி பூண்டுள்ளோம். ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி தரமான பொருட்கள், நடைமுறைகள், மருத்துவர்கள் ஆகியோரை சுகாதார முறையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இது நடைமுறைப் படுத்தப்படும்.
நமது முயற்சிகள் மக்களுக்கான நோய் தடுப்பு, ஆரோக்கிய மேம்பாடு, ஒட்டு மொத்த ஆரோக்கியம் அடிப்படையில் ஆயுர்வேதாவையும் ஆயுஷ் முறையையும் முற்றிலும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
ஆயுர்வேதா, யோகா, இதர பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்துவதை அதிக பட்சமாக மாற்றுவோம். ஒருங்கிணைந்த மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். தொடக்க நிறுவனங்களை உருவாக்க முயற்சி செய்யும் இளம் தொழில் முனைவோர் முழுமையான மருத்துவ முறைகளில் பல வாய்ப்புகளை காண இயலும்.
மருத்துவத் துறை திட்டமிடலில் ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாடு குறித்து சிந்திக்கும் போது இந்த முறைகளை எதிர்நோக்கியுள்ள சவால்களையும் உண்மை நிலைமைகளையும் சிந்தித்து ஆக வேண்டும்.
கிராம மக்கள் பலருக்கு பாரம்பரிய மருந்துகள் வாங்கக்கூடிய திறன் உண்டு. இந்த மக்களுக்கு உள்ளூரிலேயே காலத்தால் சோதிக்கப்பட்ட பாதுகாப்பான திறன் பட்ட இந்த மருந்துகள் கிடைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேல் இந்த மருத்துவ முறை தான் வளரும் சமுதாயத்தின் சுற்றுச்சூழல் முறையையும் பண்பாட்டையும் உள்ளடக்கியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வளரும் நாடுகளின் பல பகுதிகளில் பாரம்பரிய மருத்துவ முறைதான் அனைவருக்கும் கிடைக்கும் குறைந்த விலையிலான ஒரே மருத்துவ முறையாக உள்ளது.
எனவே இந்த முறைகளின் தரத்தை உறுதி செய்வது மேலும் முக்கியமானதாக ஆகிவிட்டது.
ஆயுர்வேதத்தின் முக்கியப் பிரச்சினைகளான பாதுகாப்பு, தரம், எளிதில் கிடைக்கும் திறம் ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் இங்கு குழுமியுள்ள ஆயுர் வேதத்தில் அக்கறையுள்ள அனைவரும் உடன்பாடு உள்ளவர்களாகவே இருப்பார்கள். உயிரி மருத்துவம், சுகாதார தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தற்போது ஏற்பட்டு வரும் போக்குகளுடன் நாம் இணைந்து செல்ல வேண்டியது அவசியம்.
சீனாவில் முழுமைப் படுத்தும் மற்றும் மாற்று மருத்துவ முறையின் பெரிய பகுதிகளை உள்ளடக்கிய பாரம்பரிய சீன மருத்துவத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு கொள்கைகளையும் வரைமுறைகளையும் உருவாக்குவதில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது எனக்குத் தெரியும்.
அடுத்த நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். ஆயுர்வேதம் மற்றும் இதர இந்திய மருத்துவ முறைகள் பிரபலமடைவதை, பரவுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
2013 பிப்ரவரி மாதம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஏற்றுக் கொண்ட பாரம்பரிய மருத்துவம் குறித்த டெல்லிப் பிரகடனம் (உலக சுகாதார நிறுவனத்தின் மண்டலக் குழுவினர் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது) உறுப்பு நாடுகள் பாரம்பரிய மருத்துவத்தின் மேம்பாட்டுச் செயல்களில் இணக்கமான அணுகுமுறையை உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக என்னிடம் கூறப்பட்டது.
டெல்லி பிரகடனத்தின் பிரிவுகளைச் சரியாக நடை முறைப்படுத்தவதன் மூலம் ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் முறையான வளர்ச்சியை தேசிய, மண்டல மற்றும் உலக நிலைகளில் அடையும் என்று நான் நம்புகிறேன்.
ஆயுர்வேதா மற்றும் ஆயுஷ் முறைகளில் நமது நிறுவனங்களின் சேவைகளை பயிற்சி, திறன் மேம்பாடு, தகவல் தொழில் நுட்ப பரிவர்த்தனை திட்டங்களுக்கு வழங்க முன் வந்துள்ளோம்.
இந்தத் துறைகளில் நமது தலைமை நிலைத்திருக்க நாம் தரமான சுகாதார சிகிச்சை மற்றும் கல்வி முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும். திறம் மிக்க மருத்துவர்களை உருவாக்கும் முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
கனவான்களே சீமாட்டிகளே, ஆயுர்வேதம் யோகா ஆகியவற்றின் நீண்ட வரலாற்றையும் வளமான பாரம்பரியத்தையும் கொண்டது இந்தியா என்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆயுர்வேத அறிவின் பல பண்பாட்டு அடிப்படை அவை தொடர்பான சாஸ்திரிய நூல்களில் வெளிப்படுகின்றன. மூலிகைச் செடிகளைப் பெறுவதற்கு மாடு மேய்ப்பவர்கள், வேட்டையாடுபவர்கள், காட்டுவாசிகள் ஆகியோரின் உதவியை நாட வேண்டுமென்று சாரகா சம்ஹித்தாவும் சுஷ்ருதா சம்ஹித்தாவும் மருத்துவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
சாரகா சம்ஹித்தாவில் ஆயர்வேத கொள்கை வகுக்க கூடியிருந்த அறிஞர்களில் மத்திய ஆசிய மருத்துவ ஒருவரும் பங்கேற்றார் என்பதை அறிய வருகிறோம்.
3 முக்கிய சாஸ்திரிய நூல்கள் புத்தசமய அற நெறிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. இவற்றில் ஒரு சாஸ்திரமான அஸ்தங்கஹிருதயம் நூலை இயற்றிய வாக்பாட்டா ஒரு புத்த சமயத்தவர்.
எனவே இந்த பாரம்பரியங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் அறிவைப் பகிர்ந்து கொண்டு வளர்ந்தன என்பது தெளிவாகிறது. அவர்கள் சாதாரணமானவர்கள் முதல் ஞானம் உள்ளவர்கள் வரை அனைவரிடமிருந்தும் கற்றனர்.
இந்த முயற்சிளை நாம் தொடர்ந்து மேற்கொள்ளுவோம். நமது முறைகளின் அறிவினை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளுவோம். அடுத்த முறைகளிலிருந்து கற்றுக் கொண்டு நமது பாரம்பரியத்தை வளமுள்ளதாக செய்வதில் தொடருவோம்.
இந்த நெடு நோக்கினை உலக ஆயுர்வேத திருவிழா முன்னெடுத்துச் செல்கிறது.
உலக ஆயுர்வேத திருவிழா, அதன் நெடுநோக்கு மாநாடு ஆகியவை வெற்றிபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆயுர்வேதாவை உலகத்தில் நிலை நிறுத்த முக்கியமான பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் என்று நம்புகிறேன்.
எனது உரையை ஆயுர்வேதாவின் மிகப்பிரபலமான நூலாகிய அஸ்தங்கஹிருதய வார்த்தைகளுடன் முடிக்க விரும்புகிறேன்.
“ஏழைகள், நோயால் அவதிப்படுபவர்கள், துயரத்தால் அவதிப்படுபவர்கள் ஆகியோருக்கு உதவ வேண்டும். ஈ, எறும்புகளைக் கூட நம்மைப் போலவே அன்புடன் நடத்த வேண்டும்”.
இது தான் ஆயுர்வேதத்தின் வழிகாட்டும் நெறி. இதுவே நம் அனைவருக்கும் வழிகாட்டும் நெறியாக இருக்கட்டும்.
நன்றி
In India we have had a long great tradition of saints & hermits who evolved our own indigenous systems of healthcare: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
Government fully committed to promotion of Ayurveda and traditional systems of medicines: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
For quality control of AYUSH drugs steps are being taken to bring regulatory amendments for effective enforcement & strengthening: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
In the words of Swami Vivekananda, therefore, we shall- combine the best of the east with that of the west: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
We need to look beyond providing healthcare and engage in the pursuit of good health, a combination of physical and mental well being: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
Escalating costs of treatment, side effects of medicines have prompted experts to think of widening horizons to traditional systems: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
Our efforts are to tap real potential of Ayurveda, other AYUSH systems in imparting preventive, promotive, holistic healthcare to people: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
Traditional medicine is affordable to many rural people, locally available to the communities, time-tested for its safety and efficacy: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
Above all it imbibes the culture and eco-system of the communities within which it grows: PM @narendramodi on traditional medicines
— PMO India (@PMOIndia) February 2, 2016
We will learn from the experience of other countries & ensure Ayurveda & other Indian systems are propagated & popularised: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
Would like to offer institutions as centres for training, capacity building & information & technology exchange programs in Ayurveda: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
India has a long history and rich heritage of Ayurveda and Yoga: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
Our traditions grew by sharing knowledge, both locally as well as across cultures: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
We will share the knowledge of our systems with the world and continue to enrich our traditions by learning from other systems: PM
— PMO India (@PMOIndia) February 2, 2016
I will end with words from Ashtangahrdayam one of the most famous texts of Ayurveda: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 2, 2016
The poor, those suffering from disease and those afflicted by sorrow should be helped: PM @narendramodi quotes Ashtangahrdayam
— PMO India (@PMOIndia) February 2, 2016
Even insects and ants should be treated with compassion, just as one's own self: PM @narendramodi quotes Ashtangahrdayam
— PMO India (@PMOIndia) February 2, 2016
We are continuously working for welfare of India's industrious workforce & are striving towards 'Making India a Better Work Place for All.'
— Narendra Modi (@narendramodi) February 2, 2016
My speech at Global Ayurveda Festival, Kozhikode was on importance & relevance of Ayurveda & how it has solutions to many health problems.
— Narendra Modi (@narendramodi) February 2, 2016
Spoke on steps Govt is taking to popularise Ayurveda & traditional systems of medicines, key to our vision of providing holistic healthcare.
— Narendra Modi (@narendramodi) February 2, 2016
When it comes to Ayurveda, its vital to address issues of safety, quality, efficacy & keep pace with emerging trends https://t.co/VmCiC5Qr0N
— Narendra Modi (@narendramodi) February 2, 2016